கருணை கிழங்கு குருமா செய்வது எப்படி? | Karunai Kilangu Kuruma Recipe !





கருணை கிழங்கு குருமா செய்வது எப்படி? | Karunai Kilangu Kuruma Recipe !

0
தேவையானவை:
கருணைக்கிழங்கு – 200 கிராம்,

கேரட் – 50 கிராம்,

பெரிய வெங்காயம் – 2,

பூண்டு – 3 பல்,

சாம்பார் பொடி – அரை டீஸ்பூன்,

மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை,

எண்ணெய் – 3 டீஸ்பூன்,

உப்பு – தேவைக்கேற்ப.

அரைத்துக் கொள்ள:

துருவிய தேங்காய் – 6 டீஸ்பூன்,

சிறிய தக் காளி, பச்சை மிளகாய் – தலா ஒன்று,

சோம்பு, கசகசா – தலா ஒரு டீஸ்பூன்,

முந்திரி – 4.

செய்முறை:
கருணை கிழங்கு குருமா செய்வது
கருணை கிழங்கைத் தோல் சீவி, சுத்தம் செய்து, மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.

கேரட் டையும் அதே போல் செய்து கொள்ளவும். வெங்காயம், பூண்டு இரண்டையும் நீள வாக்கில் நறுக்கவும்.

அரைக்கக் கொடுத் துள்ள பொருட்களை சிறிதளவு நீர் விட்டு அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்களை வதக்கி… 

உப்பு, மஞ்சள்தூள், சாம்பார் பொடி சேர்த்து மேலும் வதக்கி, அரை டம்ளர் நீர் விட்டு காய்கள் குழைந்து விடாமல் வேக வைக்கவும்.

வெந்து கொண்டிருக்கும் கலவையில், அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து, இரண்டு கொதி வந்ததும் இறக்கவும். 

விருப்பப் பட்டால், கொத்த மல்லித் தழை தூவி அலங்கரிக்க லாம். குறிப்பு: மூலநோய் உள்ளவர்களுக்கு இது நிவாரணம் அளிக்கும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)