டேஸ்டியான சுக்கு காபி செய்வது எப்படி?





டேஸ்டியான சுக்கு காபி செய்வது எப்படி?

0
சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை என்ற பழமொழியை நம் முன்னோர்கள் வைத்திருக்கிறார்கள் என்றால், அந்த அளவுக்கு மருத்துவ நன்மைகள் அதில் உண்டு.
டேஸ்டியான சுக்கு காபி செய்வது எப்படி?
நன்றாக காய வைக்கப்பட்ட இஞ்சியை தான், சுக்கு என்று சொல்கிறோம். இது எளிதில் கெடாத உணவுப் பொருள். சமையலுக்கும், மருத்துவத்துக்கும், பயன்படக் கூடியது. 

இந்த சுக்குப்பொடி, விஷக்கடியையும் விரட்டும், விஷ ஜூரத்தையும் விரட்டும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, சுக்கு, மிளகு, பூண்டு, வேப்பிலை போன்றவற்றை சேர்த்து கஷாயம் போல குடித்து வந்தாலே விஷஜூரம் பறந்துவிடும். 

சிறிது சுக்குடன், ஒரு வெற்றிலையை மென்று தின்றால், வாயுத்தொல்லை நீங்கும். வாதம், மூட்டு வீக்கம் போன்றவற்றிற்கு சுக்கு நல்ல தீர்வினை தருகிறது. 
சிறுநீர் தொற்று ஏற்பட்டு விட்டால், பசும்பாலில் சுக்கு தூளையும், நாட்டு சர்க்கரையும் சேர்த்து குடித்தாலே, சிறுநீரக நோய் தொற்று நீங்கி விடும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது சுக்கிற்கும் பொருந்தும். 

காரணம், அதிக அளவு சுக்கு பயன்படுத்தினால், வயிற்றுப்போக்கு, நெஞ்செரிச்சல் போன்ற தொந்தரவுகள் வரலாம். அதிலும் அல்சர் பிரச்சனை இருப்பவர்கள், டாக்டரின் ஆலோசனையை பெற்று சுக்கு சாப்பிட வேண்டும்.

சரி இனி சுக்கு பயன்படுத்தி டேஸ்டியான சுக்கு காபி செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம். 

தேவையானவை

சுக்கு – 1 துண்டு,

ஜாதிக்காய் – 1 சிறு துண்டு,

மல்லி – 1 டீஸ்பூன்,

பனை வெல்லம் – 3 டீஸ்பூன்,

ஏலக்காய்ப் பொடி – 2 சிட்டிகை.

செய்முறை :
சுக்கு காபி செய்வது எப்படி?
முதலில் சுக்கு, மல்லி, ஜாதிக்காய் மூன்றையும் வெறும் வாணலியில் வறுத்து அரைத்துக் கொள்ளவும். பின்பு அப்பொடியை கொதிக்கும் நீரில் போட்டு மூடி சிறிது நேரம் வைக்கவும்.

பின் அதனை வடிகட்டி அதனுடன் பனை வெல்லம், ஏலக்காய்ப் பொடி சேர்த்து குளிர் காலமாக இருந்தால் சூடாக அருந்தவும். வெயில் காலமாக இருந்தால் குளிர்ச்சியாக அருந்தவும். சுக்கு காபியில் மல்லி தயார்.
பலன்கள்

சுக்கு காபி வயிற்று வலி, அஜீரணம், வயிற்றுப்போக்கு, சளி அல்லது தொண்டை புண் போன்ற செரிமான பிரச்சனைகளை குணப்படுத்த உதவுகிறது. 

இஞ்சி மற்றும் கொத்தமல்லியுடன் கூடிய சுக்கு காபி குடல் ஆரோக்கியத்தை பராமரிப்பது மட்டுமல்லாமல், குமட்டலுக்கு ஒரு சிறந்த தீர்வாகும். உயர் இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள் காபி குடிப்பது நல்லதல்ல.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)