சுவையான முட்டை ப்ரைடு ரைஸ் செய்வது எப்படி?





சுவையான முட்டை ப்ரைடு ரைஸ் செய்வது எப்படி?

உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்த முட்டை மிகவும் இன்றியமையானது. ஏனெனில் முட்டையில் அதிக அளவில் சத்துக்களானது நிறைந்துள்ளது. 
முட்டை ப்ரைடு ரைஸ் செய்வது
முட்டையில் புரதம் ரிபோப்லாவின், போலேட், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், செலினியம், மக்னீசியம், விட்டமின் A, E மற்றும் B6 அதிகமாக உள்ளதால், இவை தசை மற்றும் திசுக்களின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டத்தை அளிக்கிறது.

முட்டையில் எலும்பின் ஆரோக்கியத்திற்கு தேவையான விட்டமின் D மற்றும் கால்சியம் சத்துக்கள் அதிகமாக இருக்கிறது. எனவே இதை தினமும் சாப்பிடுவதால், நம் உடம்பில் உள்ள எலும்புகளின் வலிமை அதிகரிக்கச் செய்கிறது.
முட்டை லுடீன் மற்றும் ஸீக்ஸாக்தைன் ஆகிய கரோட்டினாய்டு பொருட்களை அதிகமாக கொண்டுள்ளதால், இது நமது கண்களின் கருவிழி செயலிழப்பு மற்றும் கண்புரை நோய்களை தடுத்து, கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

முட்டையில் உள்ள கோலைன் என்ற பொருள் நரம்பு மண்டலம் மற்றும் இதய நரம்பு மண்டலத்தின் பிரச்சனைகளைக் குறைத்து, மூளையின் செயல்பாட்டை சிறப்பாக இயக்குவதற்கு உதவுகிறது.

வீட்டிலேயே எளிய முறையில் முட்டை ப்ரைடு ரைஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

பாசுமதி அரிசி – 1 கப்

வெங்காயம் – 2

கேரட் – 1

பீன்ஸ் – 50 கிராம்

பச்சை பட்டாணி – 1 /2 கப்

வெங்காயத்தாள் – 1

குடை மிளகாய் – 2

இஞ்சி பூண்டு விழுது – 1 மேஜை கரண்டி

முட்டை – 3

சில்லி சாஸ் – 1 மேஜை கரண்டி

சோயா சாஸ் – 1 மேசைக் கரண்டி

மிளகு தூள் -1 மேஜை கரண்டி

நெய் – 1/4 கப்

உப்பு – தேவையான அளவு

செய்முறை :

வெங்காயத்தை நீள வாக்கில் வெட்டிக் கொள்ளவும். கேரட், பீன்ஸ், குடை மிளகாய், வெங்காயத் தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும். பட்டாணியை வேக வைத்து கொள்ளவும்.

சாதம் உதிர் உதிரக வடித்து ஆற வைத்து கொள்ளவும். ஒரு வாணலியில் சிறிது நெய் ஊற்றி முட்டையை உடைத்து ஊற்றி சிறிது உப்பு சேர்த்து பொரித்து கொள்ளவும். 
ஒரு வாணலியில் நெய் ஊற்றி அதில் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். அடுத்து அதில் பாதி வெங்காயத் தாளை சேர்த்து வதக்கி பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். 
அதன் பின் கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி சேர்த்து கலர் மாறாமல் வதக்கவும். அடுத்து அதில் குடை மிளகாயை போட்டு வதக்கவும்.

அனைத்து வெந்ததும் அதில் உப்பு, சோயா சாஸ், சில்லி சாஸ், மிளகு தூள் சேர்த்து நன்றாக வதக்கவும் மூடி வைத்து வேக வைக்கவும். 

காய்கறி நன்றாக வெந்த பின் ஆற வைத்த சாதம், பொரித்த முட்டை சேர்த்து நன்றாக கிண்டி இறக்கவும். முட்டை ப்ரைடு ரைஸ் ரெடி.
Tags: