Recent

featured/random

ஃபிஷ் ரோல் செய்வது | Fish roll Recipe !

தேவையான பொருட்கள்

மீன் – 250 கிராம்

உருளைக் கிழங்கு – 250 கிராம்

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்

மிளகாய்ப் பொடி – 1 டீஸ்பூன்

மல்லிப் பொடி – 1 டீஸ்பூன்

பெரிய வெங்காயம் – 2

உப்பு, மிளகுத் தூள் – தேவையான அளவு

சீனி – 1 டீஸ்பூன்

மைதா மாவு – 2 டீஸ்பூன்

முட்டை – 2

ப்ரெட்க்ரம்ஸ் – 2 கப்

கொத்த மல்லி – சிறிது

செய்முறை
ஃபிஷ் ரோல் செய்வது

பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். உருளைக் கிழங்கை வேக வைத்து தோலை உரித்து விட்டு நன்கு உதிர்த்துக் கொள்ளவும்.

அதனுடன் உப்பு, மிளகாய் பொடி, மல்லிப் பொடி, சீனி சேர்த்து பூரி மாவு போல பிசைந்து வைத்துக் கொள்ளவும்.

மீனை அவித்து முள், எலும்பு ஆகிய வற்றை நீக்கி சதைப் பாகத்தை மட்டும் எடுத்து உதிர்த்து வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் சூடாக்கி அதில் வெங்காயம் போட்டு வதக்கி பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும். 

மைதா மாவை போட்டு 2 நிமிடம் கிளறி, உதிர்த்து வைத்துள்ள மீனையும் போட்டு கிளறி, கொத்தமல்லி போட்டு இறக்கவும்.

பிசைந்து வைத்துள்ள உருளைக் கிழங்கு மாவில் ஒரு சிறிய உருண்டை எடுத்து பூரி போல் தேய்த்து

அதற்கு நடுவில் மீன் கலவையை 2 டேபிள் ஸ்பூன் அளவு வைத்து பூரியை பாய் போல் சுருட்டி மேல்புறமும், கீழ் புறமும் உருளைக் கிழங்கு மாவால் மூடவும்.

மீன் ரோலை நன்கு அடித்து வைத்துள்ள முட்டையில் முக்கி எடுத்து ரொட்டித் தூளில் புரட்டி எடுத்து எண்ணெயில் பொட்டு பொன்னிற மாகப் பொரித்தெடுக் கவும். தக்காளி சாஸ் அல்லது சில்லி சாஸீடன் பரிமாறவும்.
Tags:

#buttons=(Accept !) #days=(300)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !