நாட்டு காய்கறிகள் மிக்ஸ் சூப் செய்வது எப்படி?





நாட்டு காய்கறிகள் மிக்ஸ் சூப் செய்வது எப்படி?

0
பல நோய்கள் மற்றும் தொற்றுகளுக்கு தேவையான மருந்து கோவப்பழங்களில் இருந்து தயாரிக்கப் படுகிறது. காய்ச்சல், மஞ்சள் காமாலை போன்ற நோய்களுக்கு இதிலிருந்து மருந்து தயாரிக்கப் படுகிறது. 
நாட்டு காய்கறிகள் மிக்ஸ் சூப் செய்வது எப்படி?
கோவக்காயில் உள்ள பீடா கரோடின் என்னும் சத்தானது இதயம் தொடர்பான நோய்களை தடுக்கிறது. கோவக்காயில் இரும்புச்சத்து, கால்சியம், விட்டமின் பி1 மற்றும் பி2, நார்ச்சத்து போன்றவை உள்ளன. 

ஆயுர்வேதத்தில் ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதற்கு கோவக்காயை பயன்படுத்துகின்றனர். இந்தக் கொடியின் தண்டுகள் மற்றும் இலைகளை பறித்து சூப் வைத்து அருந்தலாம். 

உடல் பருமனை தடுப்பதற்கான பண்புகள் கோவக்காயில் உள்ளன. உடலில் கொழுப்பு செல்கள் உருவாகுவதை இது தடுக்கும். 
அதே போல மெடபாலிச நடவடிக்கைகளை ஊக்குவிக்கும். நார்ச்சத்து மிகுதியாக இருப்பதால் மலக்கட்டு மற்றும் குடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும்.

கோவக்காய் இலைகளை பச்சையாக சாப்பிட்டால் குளுக்கோஸ் சகிப்புணர்வு அதிகரிக்குமாம். வாரம் ஓரிரு நாட்கள் இதை உங்கள் உணவில் சேர்த்து வர சர்க்கரை கட்டுக்குள் வரும்.

என்னென்ன தேவை?

பீர்க்கங்காய் - 50 கிராம்,

புடலங்காய் - 50 கிராம்,

கேரட் - 50 கிராம்,

கோவைக்காய் - 50 கிராம்,

நீர்ப்பூசணிக்காய் - 50 கிராம்,

வெண்ணெய் - 2 டீஸ்பூன்,

உப்பு, மிளகுத்தூள் - தேவைக்கு,

மல்லித்தழை - சிறிது,

பூண்டு - 3 பல்,

தண்ணீர் - 750 மி.லி.,

பெரிய வெங்காயம் - 1/2,

சீரகம் - 1 டீஸ்பூன்,

பெங்களூர் தக்காளி - 1/2.
எப்படிச் செய்வது?

வெங்காயம், தக்காளி, பூண்டு, காய்கறிகளை பொடியாக நறுக்கவும். ஒரு அகலமான தவாவில் வெண்ணெயை போட்டு உருகியதும் வெங்காயம், பூண்டு, தக்காளியை சேர்த்து வதக்கி, காய்கறிகளை வதக்கவும். 

இத்துடன் சீரகம், உப்பு, மிளகுத் தூளை சேர்த்து கிளறி 750 மி.லி. தண்ணீரைச் சேர்த்து மிதமான சூட்டில் வேக விடவும். தண்ணீர் 500 மி.லி. சுண்டியதும் இறக்கவும். 
வெந்த காய்களை மிக்சியில் அரைத்தோ அல்லது நன்கு மசித்து கொண்டோ, சிறிது சூடு செய்து உப்பு, மிளகுத்தூள் சேர்த்து இறக்கவும். மல்லித் தழையைத் தூவி சூடாக பரிமாறவும்.

குறிப்பு:

சூப்பைக் கொதிக்க விட்டால் அதிலுள்ள சத்துக்கள் வீணாகி விடும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)