சுவையான சிட்டா பட்டர் சிக்கன் செய்வது எப்படி?





சுவையான சிட்டா பட்டர் சிக்கன் செய்வது எப்படி?

பட்டரில் உள்ள ஆரோக்கியமான கொழுப்பு உடலுக்குத் தேவையான எனர்ஜியைக் கொடுப்பதோடு மெட்டபாலிசத்தைத் தூண்டுகிறது. இதனால் உடல் எடை வேகமாகக் குறைய ஆரம்பிக்கும்.
சிட்டா பட்டர் சிக்கன் செய்வது
பட்டர் டீயில் அதிக அளவில் காஃபைன் நிறைந்திருக்கிறது. இது உடலுக்குத் தேவையான முழு எனர்ஜியையும் கொடுக்கிறது. 

அதனால் டீயுடன் பட்டர் சேர்த்து எடுத்துக் கொள்ளும் போது கூடுதலான உடலுக்குத் தேவையான எனர்ஜியைப் பெற முடியும். மோசமான செரிமான மண்டலத்தையும் சரிசெய்து ஜீரண சக்தியை மேம்படுத்த உதவுகிறது.  

தினமும் குறைந்தது ஒரு கப் பட்டர் டீ குடிப்பதால் வாயுத்தொல்லை மற்றும் அசிடிட்டி ஆகியவை ஏற்படாமல் தவிர்க்க முடியும். பட்டர் டீ குடிப்பதால் இதய ஆரோக்கியத்திற்கு எந்தவித கெடுதலும் ஏற்படாது. 
ஏனெனில் இதில் அதிகப்படியான லினோலிக் அமிலம் இருக்கிறது. இது கெட்ட கொலஸ்டிராலைக் குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தன்மையை கொண்டிருக்கிறது. 

அசைவ உணவு வகைகளில் ஒன்றான சிக்கன் வைத்து செய்யப்படும் அனைத்து உணவுகளுக்கும் ஒரு கூட்டமே அடிமையாக இருக்கும். 

சில்லி சிக்கன், சிக்கன் 65, சிக்கன் கிரேவி, சிக்கன் தந்தூரி என்று எதை செய்து கொடுத்தாலும் அடுத்த நிமிடமே காலி ஆகி விடும். அந்த வகையில் சிக்கன் ரெசிபிகளில் ஒன்றான பட்டர் சிக்கன் ரெசிபியை இன்று நாம் காண உள்ளோம். 

இது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் என்றாலும் குறிப்பாக குழந்தைகள் மிகவும் பிடித்து சாப்பிடக் கூடிய ஒரு உணவு என்றும் கூறலாம். 

என்னென்ன தேவை?
சிக்கன் - 100 கிராம், முந்திரி - 10,

வெங்காயம் - 150 கிராம்,

தேங்காய்த் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்,

பச்சை மிளகாய் - 4,

நெய் - 50 மி.லி.,

இஞ்சி பூண்டு விழுது - 3 டீஸ்பூன்,

தயிர் - 100 கிராம், உப்பு - தேவைக்கு,

கஸ்தூரி மேத்தி தூள் - 1/4 டீஸ்பூன்,

வெண்ணெய் - 50 கிராம்,

ஜாதிக்காய் மற்றும் ஏலக்காய்த் தூள் - தலா 1/2 டீஸ்பூன்,

ஃப்ரெஷ் கிரீம் - 50 மி.லி.,

கருப்பு ஏலக்காய் - 1.

எப்படிச் செய்வது?

முந்திரி, வெங்காயம் மற்றும் தேங்காய்த் துருவலை கொதிக்க வைத்து தண்ணீரை வடிகட்டி விழுதாக அரைக்கவும். கடாயில் எண்ணெயை காய வைத்து இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் மற்றும் அரைத்த விழுதை சேர்க்கவும். 
நன்கு வதங்கியதும் மற்ற மசாலாக் களை சேர்க்கவும். மசாலா வாசனை போகும் வரை நன்கு கொதிக்க வைத்து, ஃப்ரெஷ் கிரீம் மற்றும் வெண்ணெய் சேர்க்கவும். 

சிக்கனை தந்தூரி முறையில் சமைத்து அதை இந்த மசாலாவுடன் சேர்த்து சூடாக பரிமாறவும்.
Tags: