சரவணபவன் பீன்ஸ் பொரியல் செய்வது | Saravanapavan beans fries Recipe !





சரவணபவன் பீன்ஸ் பொரியல் செய்வது | Saravanapavan beans fries Recipe !

பீன்ஸ் நல்லதாக பார்த்து வாங்கி இரண்டு விளிம்பையும் கிள்ளி விட்டு நார் எடுத்து கழுவி நீள் வாக்கில் இப்படி நறுக்கி கொள்ளவும்.
சரவணபவன் பீன்ஸ் பொரியல்
தேவையான பொருட்கள்

பீன்ஸ் - 200 கிராம்,

எண்ணெய் -2 டேபிள் ஸ்பூன்,

வெங்காயம் -1,

காய்ந்த மிளகாய் - 2,

பூண்டு பல்-1 (விரும்பினால்),

சீரகம் - அரை ஸ்பூன்,

மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்,

தேங்காய் துருவல்- 2 டேபிள் ஸ்பூன்,

கருவேப்பிலை -2 இணுக்கு,

உப்பு -தேவைக்கு

செய்முறை :

மிள்காய் வற்றல், சீரகத்தை மிக்ஸியில் பொடித்து கொள்ளவும், அதனுடன் தேங்காய் துருவல், அரிந்த பூண்டு சேர்த்து பல்ஸில் 3 சுற்று சுற்றவும்.

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை, வற்றல் தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கி, பீன்ஸ் சேர்த்து கிளறி,உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து பிரட்டவும். 
சிறிது தண்ணீர் தெளித்து மூடி போட்டு வேக விடவும். நல்ல மசுமையாக வெந்ததும் திறந்து தேங்காய் விழுதை சேர்த்து பிரட்டவும். ஒன்று சேர்ந்து மணம் வரவும் அடுப்பை அணைக்கவும். 

விரும்பினால் மல்லி இலை கட் செய்து சேர்க்கவும். சுவையான சத்தான சரவணபவன் பீன்ஸ் பொரியல் ரெடி. 

பின் குறிப்பு : 

பீன்ஸை நீளவாக்கில் கட் செய்து பொரியல் வைத்தால் ருசி மாறுதலாக இருக்கும்.
Tags: