குதிரைவாலி காராமணி பிடி கொழுக்கட்டை செய்வது | Kuthiraivali Karamani Pidi Kolukkattai Recipe !





குதிரைவாலி காராமணி பிடி கொழுக்கட்டை செய்வது | Kuthiraivali Karamani Pidi Kolukkattai Recipe !

0
தேவையான பொருட்கள் : 

குதிரைவாலி அரிசி - 1 கப், 

காராமணி - 2 டேபிள் ஸ்பூன், 

துவரம் பருப்பு - 1 டீஸ்பூன், 

சீரகம் - 1/2 டீஸ்பூன், 

மிளகு - 1/4 டீஸ்பூன், 

துருவிய தேங்காய் - 1/2 கப், 

உப்பு - சுவைக்கேற்ப, 
தண்ணீர் - 2 1/4 கப். 

தாளிக்க… 

எண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன், 

கடுகு - 1/4 டீஸ்பூன், 

உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன், 

பெருங்காயம் - ஒரு சிட்டிகை, 

பச்சை மிளகாய் - 1, 

கறிவேப்பிலை - தேவையான அளவு.

செய்முறை : 
குதிரைவாலி காராமணி பிடி கொழுக்கட்டை
ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். காரா மணியை 1/2 மணி நேரம் ஊற வைத்து, உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளவும். மிக்சியில் துவரம் பருப்பு, சீரகம், மிளகை போட்டு கொர கொரப்பாக பொடித்துக் கொள்ளவும். அடுத்து அதில் குதிரைவாலி அரிசியை சேர்த்து ரவையாகப் பொடிக்கவும். 
கடாயில் எண்ணெய் விட்டு, தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு, தாளித்த பின்னர் தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் உடைத்த ரவை, வேக வைத்த காராமணி, துருவிய தேங்காய் போட்டு நன்கு கட்டி யில்லாமல் கிளறவும். 

மிதமான தீயில் கிளறி, சேர்ந்து கெட்டியாக வந்ததும் இறக்கவும். பொறுக்கும் சூடு வந்ததும் உருண்டை களாகப் பிடித்து, இட்லி தட்டில் வைத்து, 15 நிமிடங்கள் வரை ஆவியில் வேக வைத்து எடுத்து சட்னியுடன் சூடாகப் பரிமாறவும். 

சூப்பரான குதிரைவாலி காராமணி பிடி கொழுக்கட்டை ரெடி.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)