மாவுப்பொருள் என்பது என்ன?





மாவுப்பொருள் என்பது என்ன?

மாவுப்பொருள் என்பது அதிக எண்ணிக்கையில் குளுக்கோசு இணைந்து உருவாகும் ஒருவகை காா்போ ஹைட்ரேட் ஆகும்.
இந்த கூட்டுச் சர்க்கரை எல்லா பச்சைத் தாவரங்களாலும் ஒளியின் முன்னிலையில் கார்பன் -டை- ஆக்சைடு நீர் இணைந்து உருவாக்கப்பட்டு ஆற்றல் தேவைக்காக சேமிக்கப்படும்.

மாவுப்பொருள் மனிதரின் உணவில் உள்ள பொதுவான காா்போ ஹைட்ரேட் வகையாகும். வெவ்வேறு நாட்டு மனிதர்கள் வெவ்வேறு உணவை தமது முக்கிய உணவாகப் பயன்படுத்துவர்.

தூய்மையான மாவுப்பொருள் வெண்ணிறமான, சுவையற்ற, மணமற்ற பொடியாக இருக்கும். அத்துடன் குளிர் நீரிலோ, ஆல்கஹாலிலோ கரையாது. மாவுப்பொருள் இருவகையான மூலக்கூறு களைக் கொண்டது.

முதலாவது நேரோட்ட சுருளி வடிவான (linear and helical) அமைலோசு, இரண்டாவது கிளை அமைப்புடைய (branched) அமைலோ பெக்ரின். 

தாவரங்களில் பொதுவாக 20 - 25% அமைலோசும், 75 - 80% அமைலோ பெக்ரினும் காணப்படும். விலங்குகளில் சேமிக்கப்படும் குளுக்கோசின் ஒரு தோற்றமான கிளைக்கோஸ் இவ்வகை அமைலோ பெக்ரினின் மெலதிகமான கிளையுடைய அமைப்பாகும்.

பதனிடப்பட்ட மாவுப்பொருள் உணவில் பல விதமான சக்கரைப் பதார்த்தங்கள் இருக்கும்.

சுடுநீர் சேர்க்கும் போது மாவுப் பொருள் தடிப்படைந்து, இறுக்கம் அடைந்து ஒட்டும் தன்மையுள்ள பதார்த்தமாக மாறும்.

மாவுப்பொருள் உள்ளடக்கிய உணவு

அரிசி (Rice)

கோதுமை (Wheat)

உருளைக் கிழங்கு (Potato)

சேனைக் கிழங்கு

மரவள்ளி கிழங்கு (Cassava)

மக்காச் சோளம் (Maize)

புல்லாிசி (Oats)

நீரிழிவு நோயாளிகள் முதலில் தவிர்க்க வேண்டிய உணவு இந்த மாவுப்பொருள் உள்ளடக்கிய உணவுகளை மட்டுமே.

இந்த மாவுப்பொருள் சாப்பிட்டால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்.
Tags: