கச்சா சிக்கன் பிரியாணி / Kacha Chicken Briyani Recipe !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
இந்த பிரியாணி செய்முறை மற்ற முறையை விட கொஞ்சம் சிரமமானது.என்றாலும் ருசி அமோகமாக இருக்கும். : முதலில் செய்ய வேண்டியது. அரிசியை அரைமணி நேரம் ஊற வைக்கவும்.
கச்சா சிக்கன் பிரியாணி

தேவையான பொருட்கள் : 

சிக்கன் - 900 கிராம்

பாசுமதி அரிசி - 600 கிராம்

பொரித்த வெங்காயம் - 1 கப் 

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன் ஃபுல் 

மஞ்சள் பொடி - அரை டீஸ்பூன்

மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்

கரம் மசாலா தூள் - ஒன்னரை டீஸ்பூன் 

முழு மிளகு - அரை டீஸ்பூன்

ஷாஜீரா - அரை டீஸ்பூன்

லைம் ஜூஸ் - 1 பழம்

மல்லி புதினா - தலா ஒரு கைபிடி அளவு 

கசூரி மேத்தி - 2 டேபிள் ஸ்பூன்

தயிர் - 250 மில்லி

சாஃப்ரான் - 2 பின்ச் அரை கப் பாலில் கரைக்கவும். 

உப்பு - தேவைக்கு

மைதா மாவு தம் போட - அரை கிலோ பிசைந்து வைக்கவும்.

செய்முறை :

வெங்காயத்தை நீளவாக்கில் கட் செய்து இப்படி சிவற பொரித்து எடுக்கவும். கிட்சன் டவலில் வைக்கவும். மைதா மாவை குழைத்து இப்படி உருட்டி ரெடி செய்யவும். சிக்கனை சுத்தம் செய்து கழுவி நீர் வடிகட்டி வைக்கவும். தேவையான பொருட்களை ரெடி செய்து கொள்ளவும்.

சிக்கனை ஒரு பவுலில் போட்டு தயிர், உப்பு, 1 டீஸ்பூன் கரம் மசாலா, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லி, புதினா சேர்ந்து 1 கைபிடி, கசூரிமேத்தி, வறுத்த வெங்காயம் பாதி கப் கலந்து குறைந்தது ஒரு மணி நேரம் வைக்கவும். விரும்பினால் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெயும் கலந்து ஊற வைக்கலாம்.

சிக்கனை ஊற வைத்து, விட்டு ஒரு பாத்திரத்தில் தேவைக்கு தண்ணீர் கொதிக்க வைத்து தலா அரை ஸ்பூன் கரம் மசாலா, ஷாஜிரா, மிளகு போட்டு கொதி வரவும் ஊறிய அரிசியை தட்டி, உப்பு சரியாக போட்டு பாதி வேக்காட்டில் வெந்து வடித்து வைக்கவும். கச்சா பிரியாணி செய்ய அடிகனமான பாத்திரத்தில் முதலில் ஊறிய சிக்கன் பாதி வைக்கவும்.

அதன் பின்பு வேக வைத்து வடித்த பாதிபதம் வெந்த சோறு பரத்தி, மல்லி, புதினா சிறிது, பொரித்த வெங்காயம், சாஃப்ரான் மில்க், லைம் ஜூஸ் சிறிது சேர்க்கவும். அடுத்த லேயரில் முதலில் வைத்தது போல் சிக்கன் வைக்கவும். வடித்த சாதம் போடவும். மல்லி, புதினா, வறுத்த வெங்காயம், சாஃப்ரான் மில்க், லைம் ஜூஸ் சேர்க்கவும். இப்ப இரண்டு லேயர் சிக்கன், இரண்டு லேயர் சாதம் வைத்தாயிற்று.

சிக்கனில் தண்ணீர் ஊறும்.அந்த தண்ணீர் சிக்கன் வேக போதுமானது. குழைத்து ரெடி செய்த மைதாமாவை பிரியாணி பாத்திரத்தில் சுற்றி வைத்து மூடி போட்டு அழுத்தி மூடவும். டைட்டாக இருக்க வேண்டும். முக்கால் மணி நேரம் அடுப்பை சிம்மில் வைக்கவும், இப்படி மூடுவதால் ஆவி வெளியே வர வழியில்லை.
கச்சா சிக்கன் பிரியாணி

ஆவி பத்திரத்தில் இருந்து வெளியே வராமல் அந்த ஆவியில் தான் நாம் பச்சையாக வைத்த சிக்கன், அரை வேக்காடு சோறு ஆகியவை வேகும். அடுப்பை சிம்மில் வைத்து அடியில் பழைய தோசைக்கலம் வைத்து பிரியாணி பாத்திரம் வைத்து 45 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும், கால் மணி நேரம் கழித்து திறக்கவும்.

திறந்தால் இப்படி அழகாக வெந்து மணம் கமழும்.குக்கிங் ரேஞ்சில் கூட 200 டிகிரி செட் செய்து பாத்திரத்தை அரை மணி நேரம் வைத்து எடுக்கலாம், கவனம் அடி பிடித்து விடக்கூடாது. உப்பு சிக்கனில் பின்பு சோறு வடிக்கும் பொழுதும் போட வேண்டும். உப்பு சோறில் சரியாக இருக்கா என்று பார்த்து கொள்ளவும். பொறுமையாக செய்தால் அருமையாக வரும்.

சிறிது ஃப்ரைட் ஆனியனை அலங்கரிக்க தனியாக எடுத்து வைத்து பரிமாறும் பொழுது தூவி பரிமாறலாம். பிரியாணி சோறு, சிக்கன் உடையாமல் பிரட்டி விட்டு சூடாக பரிமாறவும். சுவையான வித்தியாச ருசியுள்ள கச்சா சிக்கன் பிரியாணி ரெடி. பிரியாணி சோறும் சிக்கனும் பஞ்சாக இருக்கும். இதில் நாம் தக்காளி சேர்க்க வில்லை, நெய் உபயோகிக்கலை, எண்ணெய், வெங்காயம் பொரிப்பதற்கு சிறிது தான் அதனையும் வடிகட்டி விடுகிறோம்.

ஆரோக்கியமான பிரியாணி ரெடி. மிளகு, ஷாஜிரா, சாஃப்ரான் மில்க், கசூரி மேத்தி சேர்ப்பதால் மருத்துவ குணம் மிக்கது. உடல் நலத்திற்கு மிக நல்லது. மட்டனிலும் இப்படி செய்யலாம். இதனை நாம் பார்ட்டியில் நிறைய மற்ற டிஷ்சஸ் வைக்கும் பொழுது ரைஸ் டிஷ்க்கு இது மாதிரி செய்து வைக்கலாம்.

COMMENTS

COMMENTS
Copyright © 2020 www.esamayal.com. All rights reserved
close
𝙎𝙩𝙖𝙮 𝙃𝙤𝙢𝙚 🏠 𝙎𝙩𝙖𝙮 𝙎𝙖𝙛𝙚