ஃப்ரூட் பிரியாணி செய்முறை / Fruit Biryani Recipe !





ஃப்ரூட் பிரியாணி செய்முறை / Fruit Biryani Recipe !

0
தேவையானவை: 
திராட்சை, பலாப்பழம், பப்பாளி (மூன்றும் சேர்ந்து) - ஒரு கப்,

பாசுமதி அரிசி - ஒரு கப்,

தேங்காய்ப் பால் - ஒரு கப்,

முந்திரித் துண்டுகள் - ஒரு டீஸ்பூன்,

ஏலக்காய், கிராம்பு - தலா 1,

வெள்ளை மிளகுத் தூள் - ஒரு டீஸ்பூன்,

நெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
ஃப்ரூட் பிரியாணி செய்முறை
அரிசியைக் கழுவி 10 நிமிடம் ஊற வைக்கவும். குக்கரில் நெய் விட்டு கிராம்பு, ஏலக்காய் தாளித்து, ஊற வைத்த அரிசியைச் சேர்த்து நன்கு வதக்கவும்.

தேங்காய்ப் பால், உப்பு, வெள்ளை மிளகுத் தூளை சேர்த்து, தண்ணீர் விட்டு குக்கரை மூடவும். மிதமான தீயில் வேக வைத்து, ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.

ஆவி போனதும் திறந்து... சாதம் சூடாக இருக்கும் போதே பழக் கலவையை சேர்த்துக் கலந்து, வறுத்த முந்திரி தூவி பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)