கொண்டை கடலை மசாலா செய்முறை / Chickpea Spice Recipe !





கொண்டை கடலை மசாலா செய்முறை / Chickpea Spice Recipe !

0
தேவையானவை

கொண்டைக் கடலை – 200 கிராம்,

நறுக்கிய வெங்காயம்,

தக்காளி – தலா 2,

சாட் மசாலாத் தூள் – ஒரு டீஸ்பூன்,

கடுகு – அரை டீஸ்பூன்,

மிளகாய்த் தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்,

மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை,

தேங்காய்ப் பால் – முக்கால் கப்,

எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை :
கொண்டைக்கடலை மசாலா
முதலில் கொண்டைக் கடலையை ஊற வைத்துக் கழுவி, வேக வைத்து தனியே எடுத்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, வெங்காயம் தாளித்து, தக்காளி சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். 

பச்சை வாசனை போனதும், சாட் மசாலாத் தூளை சேர்த்து நன்கு கலந்து, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும்.

ஒரு கொதி வந்ததும் தேங்காய்ப் பால் விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, கொதிக்க விடவும். நல்ல வாசனை வந்ததும், வேக வைத்த கொண்டைக் கடலையைச் சேர்த்து, லேசாகக் கொதிக்க வைத்து இறக்கவும்.

குறிப்பு 

உங்கள்களை சுவைக்க தூண்டும் எண்ணெற்ற சுண்டல் வகைகள். நீங்கள் விழா காலங்களில் உங்களுக்கு தேவையான சுண்டல் வகைகளை சமைத்து சாப்பிடலாம்.
எப்போதும் உணவு பொருட்கள் தூய்மை யாக இருப்பது நன்று.உப்பு மற்றும் எண்ணெய் அளவாக இருத்தால் சுவையாக இருக்கவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)