ஸ்ட்ராபெர்ரி மெல்பா ஐஸ்கிரீம் செய்முறை | Strawberry Melpa Ice Cream Recipe !





ஸ்ட்ராபெர்ரி மெல்பா ஐஸ்கிரீம் செய்முறை | Strawberry Melpa Ice Cream Recipe !

என்னென்ன தேவை?

ஐஸ்கிரீம் - 2 கப்,

நறுக்கிய ஸ்ட்ராபெர்ரி பழம் - 6 அல்லது தேவைக்கு,

ஸ்ட்ராபெர்ரி ஜெல்லி பாக்கெட் - 1,

சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்,

அலங்கரிக்க நறுக்கிய நட்ஸ்,

டிரை ஃப்ரூட்ஸ் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?
ஸ்ட்ராபெர்ரி மெல்பா ஐஸ்கிரீம்
ஜெல்லி பாக்கெட் அளவின்படி, 1 கப் தண்ணீரில் ஜெல்லியை கலந்து கொதிக்க வைத்து, தேன் போல் வந்ததும் இறக்கி ஆற விடவும். 

ஒரு அலுமினியம் டிரேயில் கொட்டி ஃப்ரிட்ஜில் ஃப்ரீசரில் வைத்து செட் செய்யவும்.

ஒரு கண்ணாடி டம்ளரில் முதலில் ஸ்ட்ராபெர்ரி துண்டுகளை போட்டு, அதன் மேல் 1 கப் ஐஸ்கிரீமை வைத்து, 

அதன் மேல் நட்ஸ், ட்ரை ஃப்ரூட்சை தூவவும். ஃப்ரிட்ஜில் செட் ஆன ஜெல்லியை எடுத்து துண்டுகள் செய்து போடவும். 

அதன் மீது மீண்டும் மற்றொரு லேயரை போட்டு டம்ளர் 3/4 பாகம் வந்ததும் ஐஸ்கிரீமை வைத்து 

அதன் மேல் ஸ்ட்ராபெர்ரி பழம், நட்ஸ் கொண்டு அலங்கரித்து குளிர வைத்து உடனே பரிமாறவும்.
Tags: