சூப்பரான ஸ்ட்ராபெர்ரி - சீஸ்கேக் செய்வது எப்படி?





சூப்பரான ஸ்ட்ராபெர்ரி - சீஸ்கேக் செய்வது எப்படி?

0
நாம் உட்கொள்ளும் பழம் ருசியாக இருந்தால் மட்டும் போதாது. அதில் நம் உடலுக்கு தேவையான பல விதமான அத்தியாவசிய சத்துக்களும்  நிறைந்திருக்க வேண்டும்.
சூப்பரான ஸ்ட்ராபெர்ரி - சீஸ்கேக் செய்வது எப்படி?
ஸ்ட்ராபெர்ரி பழம் தோலின் வறட்சியைப் போக்கவும், இழந்த நீர்ச்சத்தை ஈடு செய்யவும், செல் அழிவை தடுக்கவும், மலச்சிக்கல் ஏற்படாமல் காக்கவும் 

ஏராளமான நார்ச்சத்துகள் நிறைந்துள்ள பழங்களே நமக்கு பெரிதும் உதவுகின்றன. ஸ்ட்ராபெர்ரி பழத்தில் செல் அழிவை தடுக்கும் ஆன்டி ஆக்சிடன்ட் பொருட்கள் ஏராளமாக நிறைந்துள்ளன. 

இவை பிரி ரேடிக்கல் எனப்படும்  புற்றுநோயை உருவாக்கும் ஒழுங்கற்ற செல்கள் ரத்தத்தில் கலப்பதை தடுக்கின்றன.

என்னென்ன தேவை?

மேரி பிஸ்கெட் - 5,

நறுக்கிய ஃப்ரெஷ் ஸ்ட்ராபெர்ரி - 1/3 கப்,

உருக்கிய வெண்ணெய் - 3 டீஸ்பூன்,

கெட்டித் தயிர் - 3/4 கப் 

(1 1/2 கப் தயிரை 1 மணி நேரம் வடிகட்டி வைத்தால் 3/4 கப் தயிராகும். 3/4 கப் ஆகாவிட்டால் மேலும் தயிர் சேர்த்து வடிகட்டலாம்),

ஃப்ரெஷ் க்ரீம் - 1/2 கப்,
சர்க்கரை - 3 டேபிள் ஸ்பூன் (இனிப்புக்கு ஏற்ப சேர்க்கவும்),

சைனா கிராஸ் - 1 கிராம்,

தண்ணீர் - 1/4 கப்.

எப்படிச் செய்வது?
ஸ்ட்ராபெர்ரி - சீஸ்கேக் செய்முறை
தயிரை ஒரு மெல்லிய துணியில் கட்டி 1 மணி நேரம் வடிகட்டி 1/2 கப் தயிராக மாற்றவும். பிஸ்கெட்களை கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும். உருக்கிய வெண்ணெயில் பிஸ்கெட்டை சேர்த்துக் கலக்கவும். 

இந்தக் கலவை சிறிது ஈரப்பதமாக இருக்கும். இதை ஒரு டம்ளரின் அடி பாகத்தில் போட்டு ஸ்பூனால் நன்கு அழுத்தவும். எனவே இது சமமாக மாறும். இது முதல் லேயர்.

இதை குளிர் சாதனப் பெட்டியில் மற்ற லேயர் ரெடியாகும் வரை வைத்திருக்கவும். ஸ்ட்ராபெர்ரி பழங்களை வெட்டி சர்க்கரையுடன் கலந்து வைத்துக் கொள்ளவும்.

இந்தக் கலவையை ஒரு பாத்திரத்தில் லேசாக சுட வைத்து இறக்கி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் வடிகட்டிய தயிர், க்ரீம் இரண்டையும் கலக்கவும். இத்துடன் ஸ்ட்ராபெர்ரி துண்டுகளை கலந்து கொள்ளவும். 

ஒரு கடாயில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, சைனா கிராஸ் கலந்து கொள்ளவும்.
சைனா கிராஸ் முழுவதும் தண்ணீருடன் கலந்து திரவ நிலையை அடையும் வரை கொதிக்க விடவும். இந்தக் கலவையை வடி கட்டிய தயிர், க்ரீம் கலவையில் சேர்க்கவும். 

வேகமாகக் கலக்கவும். டம்ளரில் இதை இரண்டாவது லேயர் ஆக சேர்க்கவும். இதை 5 மணி நேரம் அல்லது இரவு முழுவதும் குளிர வைக்கவும். இதற்கு பிறகு ஸ்ட்ராபெர்ரி துண்டுகளை மேலே சேர்க்கவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)