பிரெட் பூரண போளி செய்முறை | Bread Puren Recipe !





பிரெட் பூரண போளி செய்முறை | Bread Puren Recipe !

0
தேவையானவை:

பிரெட் துண்டுகள் - 10,

மைதா மாவு, பொடித்த வெல்லம் - தலா 150 கிராம்,

தேங்காய் துருவல் - 100 கிராம்,

ஏலக்காய்த் தூள் - சிறிதளவு,

நெய் - 2 டீஸ்பூன்,

கேசரி பவுடர் - சிறிதளவு. 

செய்முறை:
பிரெட் பூரண போளி

பிரெட்டை பொடித்து, தேங்காய் துருவல், வெல்லம் சேர்த்து மிக்ஸியில் அரைத்து, 

ஏலக்காய்த் தூள் சேர்த்து கெட்டியாகப் பூரணம் போல் கிளறி, சிறு உருண்டை களாக உருட்டிக் கொள்ளவும். 

மைதா மாவில் கேசரி பவுடர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து, சிறு அப்பளங்களாக இடவும். 

இதனுள் பூரண உருண்டைகளை வைத்து மூடி, ஒரு வாழை இலை (அ) பிளாஸ்டிக் ஷீட்டில் நெய் தடவி போளிகளாக தட்டவும். 

தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, காய்ந்ததும் தீயை மிதமாக வைத்து, இருபுறமும் நெய்விட்டு சுட்டெடுக்கவும்.

பருப்பு சேர்க்காத இந்த பிரெட் போளி, ருசியாகவும் மிருதுவாகவும் இருக்கும். 

பண்டிகை நாட்களில் முந்தைய நாளே தயாரித்து வைத்து விடலாம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)