டேஸ்டியான ஜவ்வரிசி இட்லி செய்வது எப்படி?





டேஸ்டியான ஜவ்வரிசி இட்லி செய்வது எப்படி?

0
சின்ன சின்ன முத்துக்களாக, உண்ணக்கூடிய வகையில் இருக்கும் ஒரு பொருளை கண்டு வியக்காதவர்களே இருக்க முடியாது. சமைக்கும் முன் வெண்ணிறத்தில் பளிச்சிடும். 
ஜவ்வரிசி இட்லி
இது சமைத்த பின் கிட்டத்தட்ட ஒளிஊடுருவும் வடிவத்தை பெற்றுவிடும். ஜவ்வரிசி என்பது பதப்படுத்தப்பட்ட சைவ வகை உணவாகும். அதனால் தான் இதனை விரதத்தின் போது பயன்படுத்துகின்றனர். 

மரவள்ளிக் கிழங்கில் எடுக்கப்படும் ஸ்டார்ச்சிலிருந்து செய்யப்படுவதே ஜவ்வரிசி. ஸ்டார்ச்சால் நிறைந்துள்ள ஜவ்வரிசியில் செயற்கை இனிப்பு மற்றும் ரசாயனங்கள் என எதுவும் இல்லாததால், இதனை பரவலாக அனைவரும் விரும்புகின்றனர். 

உடல்நலம் சரியில்லாத வர்களுக்கு ஆரோக்கியத்தை ஏற்றவும், இதனை உணவாக அளிக்கலாம். ஏனென்றால் இது உடனடி ஆற்றலையும், செரிமான சக்தியையும் அளிக்கும். 

மேலும் உடலை குளிர்ச்சி அடைய வைப்பதிலும், இது முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் அளவுக்கு அதிகமாக பித்தம் உள்ளவர்களுக்கு, ஜவ்வரிசி கஞ்சி கொடுக்கப்படுகிறது.

தேவையானவை:

இட்லி மாவு - ஒரு கிலோ

ஜவ்வரிசி - 200 கிராம்

வெல்லம் - 100 கிராம்

பால் - 100 மில்லி

செய்முறை:

ஜவ்வரிசியைக் கழுவி 10 நிமிடம் ஊற வைத்த பின்பு அதனை மிக்ஸியில் அரைத்துப் பொடி யாக்கிக் கொள்ளவும்.

வாணலியில் லேசாக அந்தப் பொடியை வறுத்துக் கொண்டு அதனுடன் பால் மற்றும் பொடி செய்த வெல்லத்தைச் சேர்த்து பாகு போல காய்ச்சவும்.

மாவு கொஞ்சம் எடுத்து இட்லித் தட்டில் ஊற்றி இந்தப் பாகுவை கொஞ்சம் ஊற்ற வேண்டும். பின்பு அதன் மேல் கொஞ்சம் மாவை ஊற்றி வேக வைக்கவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)