கோதுமை அரிசி சர்க்கரைப் பொங்கல் செய்வது எப்படி?





கோதுமை அரிசி சர்க்கரைப் பொங்கல் செய்வது எப்படி?

கோதுமை பஞ்சாபிகளின் முதன்மையான உணவு. தற்போது தென்மாநில மக்களிடமும், கோதுமை தனியிடம் பிடித்து வருகிறது. கோதுமையை வைத்துக் கொண்டு நாம் பண்ணும் வித்தை என்பது அபாரம். 
கோதுமை அரிசி சர்க்கரைப் பொங்கல் செய்முறை
தேய்த்து கல்லில் போட்டால் சப்பாத்தி, எண்ணெயில் பொரித்து எடுத்தால் பூரி, வாட்டி எடுத்தால் ரொட்டி, உள்ளே காய்கறிகளை ஒளித்து வைத்தால் பராத்தா, இப்படி நாண், ஃபுல்கா, குல்ச்சா என்று இந்திய ரொட்டி வகைககள் ஏராளம், 

ஆனால் உள்பொருள் என்னவோ அதே கோதுமை மாவுதான். கோதுமை மாவு இரத்தத்தினை சுத்தம் செய்வதாக உள்ளது. 

எலும்புகளை வலுவாக்கும் ஃபாஸ்பரஸ், மூளைக்குத் தேவையான நியாசின், உடலில் புது செல் உற்பத்திக்கு உதவும் விட்டமின் பி9, பிட்டமின் பி1, இரும்புச்சத்து, ஜிங்க், மெக்னீஷியம் போன்ற பல தாதுப்பொருள்கள் கோதுமை மாவில் அடங்கியுள்ளன. 

மாவுச்சத்துக்கு பஞ்சமே இல்லை, பசியைப் போக்கி உடலுக்கு சக்தியைத் தருவதில் சிறந்தவை கோதுமை மாவு உணவுகள்.

தேவையானப் பொருள்கள் . :

கோதுமை அரிசி -  1 கப்

பச்சைப் பருப்பு - 1/4 கப்

வெல்லம் - 1 கப்

முந்திரி - 10

திராட்சை - 10

பால் (அ) தேங்காய்ப் பால் - 1/4 கப்

ஏலக்காய் - 1

நெய் - 1/4 கப்

செய்முறை . :
பச்சைப் பருப்பை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து சுமார் 4 கப்புகள் அளவிற்குத் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். நன்றாக வெந்ததும் கோதுமை அரிசியை சேர்த்துக் கிளறி வேக வைக்கவும். 

நன்றாகக் குழைய வேக வேண்டும். இது வெந்து கொண்டிருக்கும் போதே வெல்லத்தைப் பொடித்து ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு மிதமானத் தீயில் கொதிக்க விடவும். 

வெல்லம் கரைந்து வரும்.லேசான பாகு பதம் வரும் போது இறக்கிப் பொங்களில் ஊற்றிக் கிளறவும். பிறகு பால் விட்டுக் கிளறி, ஏலக்காயைப் பொடித்துப் போட்டு சிறிது நேரம் அடுப்பில் வைத்திருந்து இறக்கவும்.

அடுத்து ஒரு வாணலி யில் நெய் ஊற்றி சூடாக்கி முந்திரி, திராட்சை வறுத்து பொங்களில் கொட்டிக் கிளறவும். சுவையான, இனிப்பான‌ கோதுமைச் சர்க்கரைப் பொங்கல் தயார்.

குறிப்பு:

கோதுமை அரிசியை வறுக்க வேண்டாம். வறுத்தால் குழைய வேகாமல் உதிருதி ராக உப்புமா போல் வரும். உப்புமா செய்வதாக இருந்தால் மட்டுமே வறுக்க வேண்டும்.

கோதுமை அரிசி வாங்கும் போது ரவை மாதிரி இல்லாமல் ஒன்றிரண் டாக உடைத்த அரிசியாக வாங்கினால் சாதம், பொங்கல், உப்புமா என வெரைட்டி யாக செய்வதற்கு நன்றாக இருக்கும்.
Tags: