மரவள்ளிக் கிழங்கு பொரியல் செய்முறை / Tapioca Rice Recipe !





மரவள்ளிக் கிழங்கு பொரியல் செய்முறை / Tapioca Rice Recipe !

மரவள்ளிக் கிழங்கில் அதிகளவு சத்துக்கள் நிறைந் துள்ளது. இன்று மரவள்ளிக் கிழங்கு வைத்து பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். 
 மரவள்ளிக் கிழங்கு பொரியல்
தேவையான பொருட்கள் : 

மரவள்ளிக் கிழங்கு - 2 துண்டுகள் 

மஞ்சள்தூள் - 1 தேக்கரண்டி 

பச்சை மிளகாய் - 2 

வெங்காயம் - 1 

காய்ந்த மிளகாய் - 2 

தேங்காய் துருவல் - 1/4 கப் 

கடுகு - 1/2 தேக்கரண்டி 

உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி 

கறிவேப்பிலை - சிறிதளவு 

உப்பு எண்ணய் - தேவையானது 

செய்முறை:

மரவள்ளிக் கிழங்கின் மேல் தோல் நடு வேர் இரண்டை யும் அகற்றி விட்டு சிறு சிறு துண்டு களாக வெட்டிக் கொள்ளவும். 

தேங்காய் துருவல், பச்சை மிளகாய், வெங்காயம் மூன்றையும் விழுது போல அரைத்துக் கொள்ளவும். 

ஒரு வாணலியில் சிறிது தண்ணீர் சேர்த்து நறுக்கி வைத்த மரவள்ளிக் கிழங்கு துண்டு களை போட்டு 

அதனுடன் தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும். 
நன்கு வெந்ததும் தண்ணீரை வடிகட்டி வைக்கவும். வாணலி யில் எண்ணெய் ஊற்றி சூடானதும் 

கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து அரைத்து வைத்துள்ள விழுதினை சேர்த்து வதக்கவும். 

பச்சை வாசனை போனவுடன் வேக வைத்த மரவள்ளிக் கிழங்கு துண்டு களை சேர்த்து பிரட்டி இறக்கி பரிமாறவும். 

சூப்பரான மரவள்ளிக் கிழங்கு பொரியல் ரெடி.
Tags: