வெந்தயக்கீரை கார குழம்பு செய்முறை / Fenugreek Curry Recipe !





வெந்தயக்கீரை கார குழம்பு செய்முறை / Fenugreek Curry Recipe !

தேவையானவை  : 

வெந்தயக் கீரை – 1/2 கப் 

சின்ன வெங்காயம் – 20 

பூண்டு – 10 பல் 

புளி – தேவையான அளவு 

சாம்பார் தூள் – 2 தேக்கரண்டி 

சிவப்பு மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி 

மல்லி தூள் – 1 தேக்கரண்டி 

மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி 

பெருஞ்சீரகம் தூள் – 1/2 தேக்கரண்டி 

உப்பு – தேவையான அளவு 

நல்லெண்ணெய் – 1 தேக்கரண்டி 

கடுகு – 1/4 தேக்கரண்டி 

வெல்லம் – ஒரு சிறிய துண்டு 

செய்முறை  :

வெந்தயக்கீரை கார குழம்பு

வெந்தயக் கீரையை நன்றாக கழுவி வெட்டி வைக்கவும். 

பின் சின்ன வெங்காயம், தக்காளியை சிறு துண்டு களாக வெட்டி வைக்கவும். 

புளியை தண்ணீரில் கரைத்து வைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து, 

பூண்டு மற்றும் நறுக்கப்பட்ட வெங்காயம் சேர்த்து வதக்கி தக்காளி சேர்க்கவும். 

பின் வெந்தயக் கீரையை சேர்த்து வதக்கி புளி கரைசல் சேர்த்து 

அதனுடன் சாம்பார் தூள், சிவப்பு மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், பெருஞ் சீரகம் தூள், உப்பு சேர்த்து பச்சை வாசம் போகும் வரை சமைக்கவும். 

இப்போது வெல்லம் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பை அனைக்கவும். 

நல்லெண்ணெய் 1 தேக்கரண்டி ஊற்றி பரிமாறவும்.
Tags: