எக்லெஸ் வெண்ணிலா கப் கேக் செய்வது எப்படி?





எக்லெஸ் வெண்ணிலா கப் கேக் செய்வது எப்படி?

மைதாவில் உள்ள கேடு தரும் ரசாயனமும், கெமிக்கல் பூச்சும் அதிகமாக உடலில் சேரும் போது பக்க விளைவுகள் உண்டாவதற்கு வாய்ப்புண்டு. 
எக்லெஸ் வெண்ணிலா கப் கேக் செய்வது எப்படி?
அத்தியாவசியமான காய்கறிகளும், உணவு பொருள்களும் இராசயன முறையில் விளைந்து வருவதால் ஏற்படும் ஆரோக்கிய குறைபாடு ஒருபுறம் என்றால் 

தெரிந்தே விஷமாகும் மைதாவை உங்கள் வீட்டில் அனுமதிக்காமல் இருப்பதே சிறந்தது என்கிறார்கள் அனுபமிக்க மருத்துவர்கள். 

வீட்டில் தயாரிக்கும் கோதுமை ரொட்டிகளில் கூட மைதாவின் வெண்மையான ரொட்டி அதிகமாக இடம் பிடித்து வருகிறது. எப்போதாவது மைதா உணவு வகைகள் என்றால் பரவாயில்லை. 
ஆனால் அவ்வப்போது மைதா உணவுகள் எடுக்கும் போது செரிமானக் கோளாறுகள் உண்டாகிறது. கடும் உழைப்பு இல்லாமல் இருப்பவர்களுக்கு மைதா உணவுகள் கெடுதலையே உண்டு பண்ணுகிறது. 

கோதுமையில் இருந்து மைதாவாக பிரித்தெடுக்கும் போது மாவு பழுப்பு நிறத்தில் இருக்கிறது. 
இந்த பழுப்பு நிறத்தைப் போக்கி பளீர் வெள்ளை நிறம் கொடுக்க துணிகளின் வெண்மை நிறத்துக்கு பயன்படுத்தும் பென்சைல் பெராக்ஸைடு, குளோரின் என கெடுதி தரும் பல இராசயனங்கள் பயன்படுத்தப் படுகின்றன.

தேவையானவை :

மைதா – இரண்டரை கப் 

பேக்கிங் பவுடர் – 2 டீஸ்பூன் 

பேக்கிங் சோடா – ஒரு டீஸ்பூன் 

உப்பு – கால் டீஸ்பூன் 

ஐஸிங் சர்க்கரை – 2 டேபிள் ஸ்பூன் 

கண்டென்ஸ்டு மில்க் – 300 மில்லி 

தண்ணீர் – ஒரு கப் 

வினிகர் – 2 டேபிள் ஸ்பூன் 

வெனிலா எசன்ஸ் – 2 டீஸ்பூன் 

உருக்கிய வெண்ணெய் – அரை கப் 

கப் கேக் மோல்ட் – ஒன்று 

லைனர் – தேவையான அளவு 

செய்முறை: 

எக்லெஸ் வெனிலா கப் கேக்
கப் கேக் மோல்டின் உள்ளே லைனர் களை வைக்கவும். மைதா மாவு, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர், உப்பு என எல்லா வற்றையும் ஒன்றாகச் சேர்த்து சலித்துக் கொள்ளவும். 

அவனை 180 டிகிரியில் 20 நிமிடம் பிரீஹீட் செய்து கொள்ளவும். தண்ணீர், கண்டென்ஸ்டு மில்க், வினிகர், ஐஸிங் சர்க்கரை், உருக்கிய வெண்ணெய், 

வெனிலா எசன்ஸ் என எல்லா வற்றையும் ஒரு பவுலில் சேர்த்துக் கலந்து கொள்ளவும். சலித்து வைத்தி ருக்கும் மாவை வெண்ணெய் கலவை யில் கொஞ்சம் கொஞ்ச மாகச் சேர்த்து, கட்டிகள் விழாமல் நன்கு கலக்கவும். 

இனி மோல்டின் உள்ளே இருக்கும் லைனரின் உள்ளே கலவையை ஊற்றவும். அவனின் உள்ளே மோல்டை வைத்து மூடி, 20 முதல் 25 நிமிடங் களுக்கு 180 டிகிரியில் பேக் செய்யவும். 
டூத்பிக்கால் கேக்கின் நடுவே குத்தி பார்த்தால், குச்சியில் கேக் ஒட்டாமல் வர வேண்டும். 

ஐஸிங் செய்யும் முறை: 

தேவை யானவை :

ஐஸிங் சர்க்கரை – ஒரு கப் 

ஆரஞ்சு ஜூஸ் – 2 டேபிள் ஸ்பூன் 

செய்முறை: 

ஐஸிங் சர்க்கரையை ஆரஞ்சு ஜூஸில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். ஆற வைத்த கேக்கின் மேல் அப்படியே பூசலாம் அல்லது தெளித்து விடலாம்.
Tags: