கீரைப் பொரியல் செய்முறை | Spinach fry recipe !





கீரைப் பொரியல் செய்முறை | Spinach fry recipe !

தேவையானப் பொருள்கள்:

கீரை - ஒரு கட்டு

பச்சைப் பருப்பு - ஒரு கைப்பிடி

பூண்டு - 5 பற்கள்

சின்ன வெங்காயம் - 2

மஞ்சள் தூள் - ஒரு துளி

தேங்காய்ப் பூ - ஒரு டீஸ்பூன் (விருப்ப மானால்)

உப்பு - தேவை யான அளவு

கீரைப் பொரியல்
தாளிக்க:

நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்

கடுகு

உளுந்து

சீரகம்

காய்ந்த மிளகாய் - 2

பெருங்காயம் - சிறிது

செய்முறை:
முதலில் பச்சைப் பருப்பை சிவக்க வறுத்து கழுவி விட்டு, மஞ்சள் தூள் சேர்த்து முக்கால் பதமாக வேக வைத்துத் தண்ணீரை வடித்து விடவும்.

பருப்பு வெந்து கொண்டி ருக்கும் போதே கீரையை ஆய்ந்து தண்ணீ ரில் அலசி எடுத்து நறுக்கி வைக்கவும்.

வெங்காயம், பூண்டையும் நறுக்கி வைக்கவும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்கக் கொடுத் துள்ளப் பொருள் களை ஒன்றன் பின் ஒன்றாகத் தாளித்து பூண்டை சேர்த்து வதக்கவும்.

பிறகு வெங்காயம் சேர்த்து வதக் கவும். அடுத்து கீரையை சேர்த்து வதக்கி, பச்சைப் பருப்பு, உப்பு சேர்த்து வேக வைக்கவும்.

தண்ணீர் ஊற்ற வேண்டாம். மூடி போட வேண்டாம். சிறிது நேரத்தி லேயே வெந்து விடும். கடைசி யாக தேங்காய்ப் பூ சேர்த்து இறக்கவும்.
Tags: