அருமையான பள்ளிபாளையம் சிக்கன் செய்வது எப்படி?





அருமையான பள்ளிபாளையம் சிக்கன் செய்வது எப்படி?

இரத்த சோகை, இரும்புச்சத்து குறைப்பாடு உள்ளவர்கள் அடிக்கடி உடல் சோர்வு பிரச்சனையை சந்திப்பார்கள். அடிக்கடி சிக்கன் உட்கொள்வது உடலுக்கு தேவையான இரும்புச்சத்தை அளிக்கிறது. 
அருமையான பள்ளிபாளையம் சிக்கன் செய்வது எப்படி?
அத்துடன், உடல் சோர்வை நீக்கி நிம்மதியான உறக்கத்திற்கு வழிவகுக்கிறது. கோழிக்கறியில் செரோடோனின் (Serotonin) ஹார்மோன் உற்பத்திக்கு உதவும் டிரிப்டோபான் (Tryptophan) உள்ளது. 

இந்த செரோடோனின் ஹார்மோன் உடலின் புத்துணர்ச்சிக்கு உதவும் ஹார்மோன் ஆகும். இதனால், உடல் சோர்வு நீங்கி உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். 

சிக்கன் துண்டுகளை எண்ணெய் சேர்க்காமல் அவித்து சாப்பிடுவது, தேவையற்ற LDL கொழுப்பை குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். எண்ணெயில் பொரித்து, வறுத்து சாப்பிடுவது இதய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். 
அசைவ உணவு வகைகளில் ஒன்றான சிக்கன் வைத்து செய்யப்படும் அனைத்து உணவுகளுக்கும் ஒரு கூட்டமே அடிமையாக இருக்கும். 

சில்லி சிக்கன், சிக்கன் 65, பட்டர் சிக்கன், சிக்கன் கிரேவி, சிக்கன் தந்தூரி என்று எதை செய்து கொடுத்தாலும் அடுத்த நிமிடமே காலி ஆகி விடும். 

அந்த வகையில் சிக்கன் ரெசிபிகளில் ஒன்றான பள்ளிபாளையம் சிக்கன் ரெசிபியை இன்று நாம் காண உள்ளோம். 
இது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் என்றாலும் குறிப்பாக குழந்தைகள் மிகவும் பிடித்து சாப்பிடக் கூடிய ஒரு உணவு என்றும் கூறலாம். 

தேவையானவை :

சிக்கன் - அரை கிலோ 

சின்ன வெங்காயம் - கால் கிலோ 

காய்ந்த மிளகாய் - 12 

மிளகாய் தூள் - அரை தேக் கரண்டி 

மஞ்சள் தூள் - அரை தேக் கரண்டி 

கறிவேப் பிலை - 10 

துருவிய தேங்காய் - 2 தேக் கரண்டி 

எண்ணெய் - 4 தேக் கரண்டி 

உப்பு - தேவை யான அளவு 
செய்முறை

சிக்கனை எலும்பு இல் லாமல் கொட்டை பாக்கு அளவிற்கு சிறு சிறுத் துண்டு களாக நறுக்கி கழுவி தண்ணீர் வடித்து வைக் கவும். 

அருமையான பள்ளிபாளையம் சிக்கன் செய்வது எப்படி?
சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். காய்ந்த மிளகாயை சிறுத் துண்டுகளாக கிள்ளி விதையை தட்டி எடுத்து விட்டு மிளகாயை மட்டும் தனியே எடுத்து வைக்கவும். 

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கிள்ளி வைத்திருக்கும் மிள காயை போடவும். மிளகாய் சிவந்ததும் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். 

வெங்காயம் வதங்கிய பின், கழுவி வைத்த சிக்கனை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கிய பின்னர் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 5 நிமிடம் வதக்கி விடவும். 
2 கையளவு தண்ணீர் தெளித்து மூடி வைத்து வேக விடவும். தண்ணீர் வற்றி சிக்கன் வெந்ததும் துருவிய தேங்காய் சேர்த்து கிளறி இறக்கவும். 

சுவையான பள்ளி பாளையம் சிக்கன் தயார்.
Tags: