டேஸ்டியான நெத்திலி கிரிஸ்பி வறுவல் செய்வது எப்படி?

டேஸ்டியான நெத்திலி கிரிஸ்பி வறுவல் செய்வது எப்படி?

மீன்களில் மிகவும் மலிவான விலையில் கிடைப்பது நெத்திலி மீன். இது சிறிதாக இருந்தாலும் பல நன்மைகளை வழங்கக் கூடியது. பொதுவாக மீன்களில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் இருக்கும். 
நெத்திலி கிரிஸ்பி வறுவல் செய்முறை
இந்த மீனில் ஒமேகா-3 அதிகம் இருப்பதோடு, கலோரிகள் குறைவு மற்றும் வைட்டமின்களும் ஏராளமாக நிறைந்துள்ளன. 

எனவே விலை மலிவில் கிடைக்கும் இந்த மீனை சாதாரணமாக நினைத்து விடாமல், வாரம் ஒருமுறை உணவில் சேர்த்து வாருங்கள். நெத்திலி மீனில் பாலி-அன்-சாச்சுரேட்டட் ஃபேட்டி அமிலம் அதிகம் உள்ளது. 

இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். எப்படியெனில், இந்த மீனை உட்கொள்வதால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் அளவு குறைந்து, இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு குறையும்.
செல்லுலார் மற்றும் இணைப்புத்திசுக்களின் வளர்ச்சிக்கும், பழுது பார்க்கவும் தேவையான புரோட்டீன் நெத்திலி மீனில் உள்ளது. 

நெத்திலி மீனில் அத்தியாவசிய ஃபேட்டி அமிலங்களுடன், வைட்டமின் ஈ, செலினியம், போன்ற சருமத்தின் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்களும் உள்ளன. 

எனவே அடிக்கடி நெத்திலி மீனை உணவில் சேர்த்து வந்தால், சரும பிரச்சனைகள் வருவது தடுக்கப் படுவதோடு, சருமம் பொலிவோடு இருக்கும். 

நெத்திலி மீனில் கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வைட்டமின் ஏ சத்து வளமாக நிறைந்துள்ளது. எனவே இவற்றை வாரம் ஒருமுறை உட்கொண்டு வந்தால், கண் பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

நெத்திலி மீனில் கால்சியம் வளமாக நிறைந்துள்ளது. இது பற்கள் மற்றும் எலும்புகளுக்கு மிகவும் அத்தியாவசியமான ஓர் சத்து. 

அதுமட்டுமின்றி இதில் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வைட்டமின் ஏ சத்தும் உள்ளது. சரி இனி நெத்திலி மீன் பயன்படுத்தி டேஸ்டியான நெத்திலி கிரிஸ்பி வறுவல் செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.  

தேவையானவை 

நெத்திலி மீன் - 1/2 கிலோ 

எலுமிச்சம் பழம் (சாறு) - 2 கரண்டி 

மிளகாய்த் தூள் - 3 டீஸ்பூன் 

தனியாத் தூள் - 3 டீஸ்பூன் 

இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன் 

எண்ணெய் - போது மான அளவு 

உப்பு - தேவைக் கேற்ப 

அரிசி மாவு - 2 கைப்பிடி 

மைதா மாவு - 1 கைப்பிடி 

சோளமாவு - 1 கைப்பிடி 

கறிவேப் பிலை - 2 கொத்து 
முகேஷ் அம்பானி கார் பற்றி தெரிந்து கொள்ள !
செய்முறை 
நெத்திலியைச் சுத்தம் செய்து கொள்ளவும். மற்ற அனைத்துப் பொருட் களையும் சேர்த்து கலவை யாக்கவும். நெத்திலியுடன் இந்த மாவு, மசாலா கலந்து சிறிது நீர் சேர்த்துப் பிசையவும். 

தேவைப் பட்டால் கலர் சேர்த்துக் கொள்ளலாம். எண்ணையைக் காய வைத்து காய்ந்ததும் நெத்திலி மீனை சிறிது சிறிதாகப் போட்டு பொறித்து எடுக்கவும்.
Tags: