பன்னீர் கலந்த மிக்சர் செய்முறை / Mixer mixed with paneer !





பன்னீர் கலந்த மிக்சர் செய்முறை / Mixer mixed with paneer !

தேவையான பொருள்கள் : 

கடலை மாவு - 500 கிராம் 

பன்னீர் - 4 சொட்டு 

மிளகாய்ப் பொடி - 50 கிராம் 

பெருங் காயத் தூள் - 20 கிராம் 

உப்பு - 25 கிராம் 

பொரிக்க வேண் டியது : 

உடைத்த கடலை - 100 கிராம் 

வேர்க் கட லை - 100 கிராம் 

அவல் - 100 கிராம் 

முந்திரி - 50 கிராம் 

திராட்சை - 50 கிராம் 

கரி வேப்பிலை - 25 கிராம் 
செய்முறை : 

கடலை மாவு, பன்னீர், மிளகாய்ப் பொடி, பெருங் காயத் தூள் போன்ற அனைத்து பொருட் களையும் ஒன்றாகச் சேர்த்து 

இதனுடன் தேவை யான அளவு உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்து க்கு பிசையவும். 

பன்னீர் கலந்த மிக்சர்

பிறகு முறுக்குக் குழலுடன் பொருந்தும் காரச்சேவு, ரிப்பன் பக்கோடா, ஓமப் பொடி ஆகிய மூன்று வகை அச்சு களையும் எடுத்துக் கொள்ளவும். 

மாவை சம அளவு பிரித்து கொண்டு ஒவ்வொரு அச்சிலும் காரச்சேவு, ரிப்பன் பக்கோடா, ஓமப் பொடி 

ஆகிய வற்றை எண்ணெ யில் வார்த்துப் பொறித்து தனியாக எடுத்து கலவை யாக வைத்துக் கொள் ளவும். 

பொரிக்க வேண்டிய பொருள் களை ஒன்றன் பின் ஒன்றாக எண்ணெ யில் பொரித்து எடுத்துக் கொண்டு பிறகு ஓமப்பொடி, காரச்சேவு, ரிப்பன் பக்கோடா கலவை யுடன் சேர்த்து கலக்கவும். 

இத்துடன் சிறிது மஞ்சள் தூள், சர்க்கரை 20 கிராம், பெருங் காயத் தூள் 20 கிராம் சேர்த்து ஒரு பாத்தி ரத்தில் நன்கு கலந்து கொள்ள வேண்டும். 

இப்போது சூடான சுவை யான மிக்சர் தயார்.
Tags: