டிரை ஃப்ரூட்ஸ் கொழுக்கட்டை செய்முறை / Dry Fruits Pudding Recipe !





டிரை ஃப்ரூட்ஸ் கொழுக்கட்டை செய்முறை / Dry Fruits Pudding Recipe !

விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் வகையில், டிரை ஃப்ரூட்ஸ் எனப்படும் 

டிரை ஃப்ரூட்ஸ் கொழுக்கட்டை

உலர்பழ வகைகளைக் கொண்டு கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:

அரிசி மாவு - ஒரு கப்,

பேரீச்சம்பழம் (விதை நீக்கியது) - 10,

முந்திரி, பாதாம், பிஸ்தா - தலா 10,

திராட்சை, வெல்லம் - தலா 50 கிராம்,

பொட்டு கடலை - 4 டீஸ்பூன்,

எண்ணெய் - 2 டீஸ்பூன்,

உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை:

கடாயில் தண்ணீர், உப்பு, சிறிதளவு எண்ணெய் சேர்த்து கொதிக்க விட்டு, அதில் அரிசி மாவு தூவி கெட்டியாக கிளறி எடுக்கவும். இதுதான் மேல் மாவு.

முந்திரி, பாதாம், பிஸ்தா, பொட்டுக் கடலையை மிக்ஸியில் கொர கொரப்பாக தூள் செய்து எடுக்கவும். 

பேரீச்சம்பழம், திராட்சை, வெல்லம் சேர்த்து அரைத்து, பருப்பு தூள்களை சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுத்தால், பூரணம் தயார்.

கையில் எண்ணெய் தடவிக் கொண்டு மேல் மாவில் சிறிது எடுத்து உருட்டி, கிண்ணம் போல் செய்து, ஒரு டீஸ்பூன் பூரணத்தை அதில் வைத்து மூடி, வேண்டிய வடிவம் கொடுக்கவும், 

அப்படியே ஆவியில் வேக வைத்து எடுக்கவும். சுவையான டிரை ஃப்ரூட்ஸ் கொழுக்கட்டை தயார்.

குறிப்பு:

திராட்சை, பேரீச்சம் பழத்தை வெந்நீரில் ஊற வைத்தும் அரைத்து எடுக்கலாம்.
Tags: