டேஸ்டியான வரகரிசி பிரியாணி செய்வது எப்படி?





டேஸ்டியான வரகரிசி பிரியாணி செய்வது எப்படி?

வரகு அரிசியில கோதுமைய விட அதிகமா நார்ச்சத்து இருக்கிறதா சொல்றாங்க. மாவுச்சத்து இதுல குறைவா இருக்குறதால ஆரோக்கியத்துக்கு ரொம்ப நல்லது. 
டேஸ்டியான வரகரிசி பிரியாணி செய்வது எப்படி?
வரகு அரிசியில நார்ச்சத்து அதிகமா இருக்கிறதால, அதிக உடல் எடையால அவதிப்பட்டு வர்றவங்க உணவுல வரகு சேர்த்துட்டு வந்தா நல்ல பலன் கிடைக்கும்.

வரகரிசி உணவுகள அப்பப்போ சாப்பிட்டு வந்தா, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு வேகமா குறைஞ்சு நீரிழிவு நோய் கட்டுக்குள்ள வரும்.

இதில நார்ச்சத்து அதிகமா இருக்குறதால, வரகரிசியில செய்யப்பட்ட உணவுகள சாப்பிட்டு வந்தா வயித்துலயும், குடல்லயும் இருக்குற புண்கள் குணமாறதுக்கு உதவிசெய்றதோட, மலச்சிக்கல் பிரச்சனையும் நீங்கும்.

வரகரிசி பழந் தமிழர்களின் பாரம்பரிய உணவில் ஒன்று. இதில், அரிசி, கோதுமையை விட நார்ச்சத்து அதிகமாக உள்ளது.வரகரிசியில் மாவச் சத்து குறைவாக உள்ளதால் உடல் ஆரோக்கிய த்திற்கு ஏற்ற உணவாகும்.
சிறு தானியங்களில் புரதம், தாது உப்புக்கள் நிறைந்த ஒரே உணவு வரகரிசியாகும். இது மாதவிடாய் பிரச்சனை உள்ள பெண்களுக்கு ஏற்ற சிறந்த சத்தான உணவு. 

கல்லீரல் செயல்பாடுகளைத் தூண்டி கண் நரம்பு நோய்களை தடுக்கும் ஆற்றல் கொண்டது. சத்தான சுவையான வரகரிசி பிரியாணி எப்படி செய்வது? 

தேவையான பொருட்கள் : 

வரகரிசி - 100 கிராம் 

கேரட் - 25 கிராம் 

பீன்ஸ் - 25 கிராம் 

பட்டாணி - 25 கிராம் 

பெரிய வெங்காயம் - 3 

தக்காளி - 3 

இஞ்சி - பூண்டு பேஸ்ட் - 1௦ கிராம் 

மிளகாய் - 2 கிராம் 

ஏழாம், பட்டை, கிராம்பு - சிறிதளவு 

கரம் மசாலா - 5 கிராம் 

எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை : 

குக்கரை சிம்மில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். பின்னர் பட்டை, ஏழாம், கிராம்பு ஆகிய மசாலா பொருட் களைப் போட்டு பொன்னிற மாக வறுத் தெடுக்கவும். 

இதில் இஞ்சி,பூண்டு பேஸ்ட், நறுக்கிய வெங்காயம், மிளகாய் போட்டு வெங்காயம் பொன்னிற மாகும் வரை வதக்கவும். 
அத்துடன் உப்பு சிறிதளவு சேர்த்து நறுக்கிய காய்கறி களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும். இறுதியாக தக்காளியை கொட்டி கிளறி கரம் மசாலாவை சேர்க்கவும். 
இத்துடன் சுமார் 3௦௦ மில்லி தண்ணீரைச் சேர்த்து கழுவி வைத்துள்ள வரகு அரிசியை கொட்டி குக்கரை மூடவும். வரகரிசியில் கசடுகள் அதிகம் இருக்கும் பட்சத்தில் நன்றாக கழுவினால் பிரியாணி சுவையாக இருக்கும். 

பின்னர் 3 அல்லது 4 விசில் வைத்து இறக்கி தயிர் பச்சடியுடன் பரிமாறவும். பாஸ்மதி அரிசி பிரியாணியை காட்டிலும் வரகரிசியில் சத்துக்கள் அதிகம்.
Tags: