மீல்மேக்கர் மசாலா செய்முறை / Meal mekkar Masala Recipe !





மீல்மேக்கர் மசாலா செய்முறை / Meal mekkar Masala Recipe !

தேவையானவை 

மீல்மேக்கர் - 200 கிராம் 

பெரிய வெங்காயம் - 2 

தேங்காய் துருவல் - 1/2 கப் 

இஞ்சி - சிறு துண்டு 

பூண்டு - 8 பல் 

சோம்பு - 1 ஸ்பூன் 

மிளகாய் வற்றல் - 8 

உப்பு எண்ணெய் - தேவையான அளவு 

செய்முறை 

மீல்மேக்கர் மசாலா

* 3 கப் தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து, அதில் மீல் மேக்கரைப் போடவும். அரை, முக்கால் மணி நேரம் ஊற விடவும்.

ஊறிய வுடன் இறுகப் பிழிந்து தண்ணீரை வடித்து எடுக்கவும். 

* தேங்காய், இஞ்சி பூண்டு, சோம்பு, மிளகாய் வற்றல், உப்பு சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். 

* வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கறிவேப் பிலை, வெங்காயம் போட்டு, வதக்கவும். 

*வதங்கியதும் அரைத்த கலவையை சேர்க்கவும். 2 நிமிடம் கொதிக்க விடவும். ஊறிய மீல் மேக்கர், 1/4 கப் தண்ணீர் சேர்த்து வேக விடவும். 

*வெந்ததும் சுருள சுருள கிண்டி இறக்கவும்.
Tags: