சேமியா இறால் பிரியாணி செய்வது எப்படி?





சேமியா இறால் பிரியாணி செய்வது எப்படி?

இறால் மீனில் உள்ள சத்துக்கள் அபரிமிதமானவை.. கனிமச்சத்தின் அளவு அதிகமாக உள்ளது. ஹீமோ குளோபினில் ஆக்ஸிஜன் கலக்கும் செயலில் முக்கிய பங்கு வகிக்கிறது இந்த கனிமம்.
சேமியா இறால் பிரியாணி செய்வது எப்படி?
கூடுதல் இரும்புச்சத்து உடம்பில் ஏறும் போது, தசைகளுக்கு கூடுதல் அளவிலான ஆக்ஸிஜன் செல்லக்கூடும். இறால் மீனை குழந்தைகள் சாப்பிட்டு வந்தால், மூளைக்கு செல்லும் ஆக்ஸிஜனின் அளவும் அதிகரித்து ஞாபக சக்தி அதிகரிக்கும். 

இறாலில் அயோடின் சத்து நிறைய உள்ளதால், உடலில் தைராய்டு ஹார்மோன்கள் சுரக்க பேருதவி புரிகின்றன. 
இந்த ஹார்மோன்கள் குழந்தை பருவத்திலும், கர்ப்பமாக இருக்கும் நேரத்திலும், மூளையின் வளர்ச்சிக்காக தேவைப்படுகிறது. இறாலில் புரதம், கால்சியம், பொட்டாசியம் மற்றும் பல வைட்டமின்கள் உள்ளன. 

பல வகை புற்றுநோய்களில் இருந்து காப்பதுடன், நுரையீரல் புற்றுநோய்க்கு எதிராக போராடும்.அசைவ உணவுகளில் இறால் மிகவும் சுவையானது. 

இன்று உங்களுக்காக இறால் சேமியா பிரியாணி எப்படி செய்வதென்று பார்ப்போம். இது மிக மிக சுவைாயாக இருக்கும். சரி சமைத்துத் தான் பாருங்களேன்.
தேவையான பொருட்கள் :

சேமியா – 2 கப்
வெங்காயம் – 1

தக்காளி-1

பூண்டு பேஸ்ட் -2 தேக்கரண்டி

பச்சை மிளகாய் – 2

மஞ்சள் தூலள் – 1 தேக்கரண்டி

மிளகாய் தூள் – 1 மேசைக்கரண்டி

கொத்தமல்லி புதினா தேவையான அளவு

பிரியாணி இலை, ஏலக்காய், கராம்பு பட்டை – 1

தயிர் – 1 கப்

எண்ணெய் – 1 மேசைக்கரண்டி

நெய் – 1 மேசைக்கரண்டி

எலுமிச்சம்பழம் – 1

செய்முறை :
இறாலை கரம் மசாலா பவுடர், உப்பு, மஞ்சள் தூல், மிளகாய் தூள், தயிர் சேர்த்து பிசைந்து வைக்கவும். பின் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் சேமியாவை 75% அவிக்கவும்.

இன்னுமொரு பத்திரத்தில் எண்ணெயும், நெய்யும் இட்டு சூடாக்கி அதில் பிரியாணி இலை, ஏலக்காய், கராம்பு பட்டை, வெங்காயம் பூண்டு இஞ்சி பேஸ்ட் சேர்த்து வதக்கி கொள்ளவும்.

அதனுடன் நறுக்கப்பட்ட தக்காளி, புதினா, கொத்தமல்லி மற்றும் சீரக பவுடர் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். பின் ஊற வைத்த இறாலை சேர்த்து வதக்கி, அவியும் வரை வேக விடவும். 

பின் சேமியாவை இறாலுடன் சேர்த்து கிளறவும். நன்கு உதிரியாக வரும் பருவத்தில் இறக்கி பரிமாறவும். சுவையான சேமியா இறால் பிரியாணி ரெடி.
Tags: