கும்பகோணம் டிகிரி காபி தயார் செய்வது எப்படி?





கும்பகோணம் டிகிரி காபி தயார் செய்வது எப்படி?

கும்பகோணம் என்றாலே நினைவுக்கு வருவது டிகிரி காபி தான். அதில் மட்டும் அப்படி என்ன தனி சுவை? என்று நினைக்க வேண்டாம். 
கும்பகோணம் டிகிரி காபி தயார் செய்வது எப்படி?
கும்பகோணம் பித்தளைப் பாத்திரங்களுக்குப் பேர் போன ஊர். அதனால் அந்தக் காலத்தில் பித்தளை டம்ளரை பயன்படுத்தி உள்ளார்கள்.

மேலும், மத்த பாத்திரங்களை விடக் கூடுதல் நேரத்துக்குப் பித்தளை பாத்திரத்துல சூடு நிலைத்து இருக்கும் என்பதற்காகத் தான் அதில் கொடுக்கிறார்களாம்.

இதைத் தமிழர்களுக்கு அறிமுகம் செய்தது கும்பகோணம் பஞ்சாமி ஐயர். கும்பகோணத்தில் நடக்கும் இசை கச்சேரிகளுக்கு வருகை தந்த இசை வித்வான்களுக்கு இந்த காபியின் ருசி பிடித்துப் போக, 

அவர்கள் செல்லும் இடமெல்லாம் பஞ்சாமி ஐயரின் பில்டர் காபி பற்றிப் பேசக் காலப்போக்கில் அதற்கு கும்பகோணம் டிகிரி காபி என்ற பெயரும் வந்தது.
இப்போது புரிந்ததா...கும்பகோணம் டிகிரி காப்பிக்கு பின் ஒளிந்திருக்கும்  ரகசியம் என்னவென்று.... நிறமும், தரமும் மாறாமல் கும்பகோணம் டிகிரி காபியை வீட்டிலேயே செய்யலாம்.
தேவையான பொருட்கள்:

காபி கொட்டை - தேவையான அளவு

பால் - 1.5 கப்

சர்க்கரை - தேவையான அளவு

தண்ணீர் - 1/2 கப்

செய்முறை :.
கும்பகோணம் டிகிரி காபி தயார் செய்வது எப்படி?
உங்களுக்கு அந்த நேரத்திற்கு என்ன அளவில் வேண்டுமோ அந்த அளவில் காபி கொட்டையை வறுத்து எடுத்துக் கொள்ளவும். அதை சிக்கிரி சேர்க்காமல் அரைத்து ஃபில்டரில் போடவும்.

அதன் மேல் ஒரு சிட்டிகை சர்க்கரையை தூவி பில்டரில் கொதிக்கும் தண்ணீரை விடவும். ஒரு முறை டிகாஷன் இறங்கியதும் அதை மட்டும் எடுக்கவும். 
தண்ணீர் சேர்க்காமல் பால் அரை லிட்டர் எடுத்து காய்ச்ச வேண்டும். இரண்டு முறை பொங்க விட்டு பாலை இரு முறை டம்ளர் டவராவில் ஊற்றி ஆரவும். 
கொதி நிலை சற்று குறைந்த பிறகு பாலுடன் டிகாஷனை கலக்கவும். (பால் இருக்கும் பாத்திரத்தில் டிகாஷனை ஊற்ற வேண்டும்).

கருமை நிறம் சற்று வந்ததும், சர்க்கரை வழக்கமாக போட்டுக் கொள்ளும் அளவில் பாதி சேர்க்கவும். பின்னர் நுரை வரும் பதத்தில் ஆற்றி டம்ளரில் ஊற்றினால் கும்பகோணம் டிகிரி காபி ரெடி..!
Tags: