ருசியான இட்லி சாட் செய்வது எப்படி?





ருசியான இட்லி சாட் செய்வது எப்படி?

உணவு என்பது எல்லோருக்கும் ஒரு அத்தியாவசியமான தேவையாகும். நாம் எல்லோரும் காலை உணவை மறக்காமல் எடுத்து கொள்ள வேண்டும்.அந்த வகையில் காலை உணவாக நாம் இட்லி, தோசை போன்ற உணவுகளை உண்பது வழக்கம். 
ருசியான இட்லி சாட் செய்வது எப்படி?
இந்த இட்லி தோசை உணவுகள் உண்பதால் அடிக்கடி பசி எடுக்காது. மிகவும் விரைவாக ஜீரணமடையும். இந்த மாவுக்கலவை செய்ய பயன்படுத்தும் உளுந்து தானியத்தில் அதிக சத்து நிறைந்து உள்ளது.

இந்த இட்லி, தோசைக்கான மாவை அநேகமானோர்  ஒரு நாள் முன்பே தயார் செய்து வைக்கின்றனர். இதில் சில மாவுக்கலவைகள் வீணாகி புளித்து விடும். 

நீங்கள் ஊளுந்து ஊற வைக்கும் போது ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அரிசி ஊற வைக்கும் போது 3 அல்லது 4 மணிநேரம் மட்டுமே ஊற வைக்க வேண்டும்.

இந்த நேர அளவை விட இதை இரவு எல்லாம் ஊற வைப்பதால் நீங்கள் இதில் அரைத்து எடுக்கும் மாவு புளித்து விடும். இந்த மாவு அரைக்கும் போது ஜஸ் வாட்டரை மட்டும் கொண்டு அரைக்க வேண்டும்.
இது இரண்டையும் சேர்த்து கலக்கும் போது கைகளை பயன்படுத்த கூடாது. இந்த மாவை டப்பா அல்லது ஒரு பாத்திரத்தில் கொட்டி காற்று உள்ளே புகாதவாறு பயன்படுத்த வேண்டும். 

நீங்கள் ஒவ்வொரு தடவையும் மாவை கிண்டும் சந்தர்ப்பங்களில் கரண்டியை கொண்டு கிண்ட  வேண்டும். இந்த மாவு கலவை போடும் பாத்திரத்தில் இரண்டு வெற்றிலை காம்பு வைத்து போட்டால் மாவு புளிக்காமல் இருக்கும்.
தேவையான பொருட்கள்:

மினி இட்லி - 16

தயிர் - 4 டேபிள் ஸ்பூன்

பெரிய வெங்காயம் - 1

மிளகாய் தூள் - சிறிது

சீரகப் பொடி - சிறிது

சாட் மசாலா - சிறிது

புதினா சட்னி - சிறிது

இனிப்பு சட்னி - சிறிது

ஓமப்பொடி - சிறிது

வெண்ணெய் - தேவையான அளவு

கொத்தமல்லி - சிறிது

கேரட் - 1

உப்பு - தேவையான அளவு

இனிப்பு சட்னிக்கு...

பேரிச்சம் பழம் - 8 (விதை நீக்கியது)

புளி - சிறு நெல்லிக்காய் அளவு

வெல்லம் - 1 டேபிள் ஸ்பூன்

சீரகப் பொடி - 1/4 டீஸ்பூன்

மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
செய்முறை :
ருசியான இட்லி சாட் செய்வது எப்படி?
பேரிச்சம் பழம் மற்றும் புளியை நீரில் 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு புளியில் உள்ள நார் மற்றும் விதையை நீக்கி விட்டு, அதனை ஒரு பாத்திர த்தில் போட்டு, 

அத்துடன் பேரிச்சம் பழம் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு வேக வைத்து இறக்கி, மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து, 
அத்துடன் வெல்லம், சீரகப் பொடி, மிளகாய் தூள் சேர்த்து பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். இது தான் இனிப்பு சட்னி. 

இட்லி சாட் செய்முறை :

கொத்த மல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். கேரட்டை துருவிக் கொள்ளவும்.

ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, சூடானதும் அதில் இட்லி களை வைத்து, மேலே சிறிது வெண்ணெய் தடவி டோஸ்ட் செய்து எடுத்துக் கொள்ளவும். 

பின்னர் ஒரு தட்டில் அந்த மினி இட்லி களை வைத்து, அதன் மேல் முதலில் தயிர் ஊற்றி, மேலே இனிப்பு சட்னி, புதினா சட்னி, வெங்காயம், துருவிய கேரட், சிறிது சீரகப் பொடி
பப்பட் ஃபிளிட்டர்ஸ் செய்வது எப்படி?
மற்றும் சாட் மசாலா தூவி, இறுதியில் ஓமப் பொடி மற்றும் கொத்த மல்லியைத் தூவ வேண்டும். இப்போது சுவையான இட்லி சாட் ரெடி!
Tags: