சுவையான கணவாய் மீன் குழம்பு செய்வது எப்படி?





சுவையான கணவாய் மீன் குழம்பு செய்வது எப்படி?

இந்த கணவாய் மீனில் பாஸ்பரஸ், பொட்டாசியம், காப்பர், ஒமேகா-3 போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. அது மட்டுல்லாமல், செலினியம் என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் இந்த மீனில் நிறைந்துள்ளது. 
கணவாய் மீன் குழம்பு
அதாவது, 100 கிராம் கணவாய் மீனில் கிட்டத்தட்ட 44.8 µg செலினியம் இருக்கிறதாம். இந்த செலினியம் என்பது ஆக்ஸிஜனேற்ற பண்புகளை கொண்டுள்ளது என்பதால், நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்த இந்த மீன் தேவையானதாக இருக்கிறது. 

கனவாய் மீனை சாப்பிடுவதால், இதய ஆரோக்கியம் காக்கப்படுகிறது. புற்றுநோய் தொடர்பான செல்கள் உருவாவது அழிக்கப் படுகிறது. அத்துடன், ஹீமோகுளோபின் பிரச்சனை இருப்பவர்கள் இந்த மீனை சாப்பிடலாம். 
இதனால், அனிமிக் தொந்தரவு நீங்கி, ரத்த சிவப்பணுக்களும், வெள்ளை அணுக்களும் அதிகரிக்கக்கூடும். அத்துடன், மூளைக்கு தேவையான ஆக்சிஜனையும் இந்த மீன் வழங்குகிறது. 

இதனால், மூளை வளர்ச்சியும் அதிகமாகிறது. ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் கணவாய் மீன் அதிகமாகக் கிடைக்கும். கிலோ ரூ. 100க்கு வாங்கலாம். 

மீன் என்று சொல்லப்பட்டாலும் இது ஒரு கடல் வாழ் உயிரி. ஜின்க், மாங்கனீஸ், வைட்டமின் பி12 நிறைந்தது இது சாப்பிட மிருதுவான இறைச்சி போல இருக்கும்.

இதை ஊறுகாயாக செய்து சேமிக்கும் வழக்கம் சில மீனவ குடிகளில் உண்டு. இதை எளிமையான செய்முறையில் சமைத்தும் உண்ணலாம்.

தேவையான பொருள்கள் :
கணவாய் மீன்

வெங்காயம்

 தக்காளி

 மஞ்சள் தூள்

 இஞ்சி

 பூண்டு

மிளகாய் தூள்
 
தாளிக்க 

எண்ணெய்

கடுகு

கருவேப்பிலை

 தேவையான உப்பு 

செய்முறை

கணவாய் மீனை சுத்தம் செய்து பலமுறை கழுவுங்கள். கழுவியதில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து பிசறி வையுங்கள். கணவாய் மீனின் அளவுக்குத் தகுந்தமாதிரி வெங்காயம், தக்காளியை பொடியாக வெட்டிக் கொள்ளுங்கள். 

இஞ்சி பூண்டை அரைத்து வைக்கவும். தாளிக்க எண்ணெய், கடுகு, கருவேப்பி லையை எடுக்கவும். தேவையான உப்பும், குழம்பு மிளகாய் தூளும் வைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு தாளித்து கடுகு, கருவேப்பிலை, வெங்காயத்தைப் போட்டு இளஞ்சிவப்பாக வதக்கவும். 

பிறகு அரைத்து இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து வாசனை மாற வதக்கி தக்காளி சேர்த்து அதனுடன் உப்பும் சேர்த்து வதக்கவும். தக்காளி வதங்கி வரும் போது மிளகாய் தூள் சேர்த்துக் கிளறவும். 
அப்போது மிளகாய் புகைக்காமல் இருக்க அடுப்பை குறைவான தீயில் வைக்கவும். அடுத்த நொடி சுத்தம் செய்து வைத்திருக்கும் கணவாய் மீனை சேர்த்து நன்றாக பிரட்டி ஒரு கப் தண்ணீர் அல்லது மிதமான தண்ணீர் சேர்த்து நன்றாக வேக விடவும். 

கணவாய் வெந்து தொக்கு பதத்துக்கு வரும்போது அடுப்பி லிருந்து இறக்கவும். வழக்கம் போல இந்த குழம்பை எல்லா வகையான உணவுடனும் உண்ணலாம். மிகவும் ருசியான கடல் உணவு இது முயற்சித்துப் பாருங்கள்.
Tags: