குளிர் காலத்துல இந்த உணவுகளை மறக்காதீங்க | Remember these foods cool times !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
நவம்பர் மாதம் வந்தாலே, சரியான குளிர்ச்சி இருக்கும். அந்த நேரம் ஸ்வெட்டர், ஸ்கார்ப், கால்களுக்கு சாக்ஸ் மற்றும் கைகளுக்கு க்ளொஸ் போன்ற வற்றை அணிந்து கொண்டி ருக்கும் நிலையில் இருப்போம். ஏனெனில் அந்த அளவில் குளிர்ச்சியானது இருக்கும்.
குளிர் காலத்துல இந்த உணவுகளை மறக்காதீங்க

சொல்லப் போனால் வெளியே செல்லக்கூட பயந்து, சிலர் பிடித்த உணவைக் கூட சரியாக சாப்பிட மாட்டோம்.

அதிலும் சிலர் பழங்கள் சாப்பிட்டால், சளி, ஜலதோஷம் போன்றவை பிடிக்கும் என்று அவற்றை சாப்பிடுவதையே நிறுத்தி விடுவர்.

இவ்வாறெல்லாம் சரியாக சாப்பிடாமல் இருந்தால், உடலை எந்த ஒரு கிருமிகள் தாக்கினாலும், அவை எளிதில் உடலில் புகுந்து தங்கிக் கொள்ளும் நிலை ஏற்படும்.

ஏனெனில் உடலில் சத்துக்கள் இல்லா விட்டால், அதிலும் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாவிட்டால், எவ்வாறு உடல் ஆரோக்கிய மாக இருக்கும்.

ஆகவே குளிர் காலத்தில் கடைகளுக்கு ஒரு முறை பர்சேஸ் செய்யப் போகும் போதே, எந்த உணவுப் பொருட்களை யெல்லாம் மறக்காமல் வாங்க வேண்டும்.

மேலும் எதற்கு அவற்றை தவிர்க்காமல் நிச்சயம் வாங்கி சாப்பிட வேண்டும் என்பதைப் பற்றி பார்ப்போமா!!!

ஆரஞ்சு

குளிர் காலத்தில் அதிகமான அளவில் சளி, ஜலதோஷம் போன்றவை அதிகம் பிடிக்கும்.

ஆகவே அத்தகைய வற்றை தடுக்க உடலில் போதிய அளவில் நோய் எதிர்ப்பு சக்தியான வைட்டமின் சி அவசியமாகிறது.

அத்தகைய சத்து ஆரஞ்சு பழத்தில் அதிகம் உள்ளன. எனவே இதனை குளிர் காலத்தில் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

பசலைக் கீரை

பொதுவாக கீரை வகைகளை அதிகம் சேர்த்தால், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

அதிலும் பசலைக் கீரையை உணவில் அதிகமாக சேர்த்து வந்தால், அதில் உள்ள அளவுக்கு

அதிகமான ஊட்டச் சத்துக்கள் உடலில் சேர்ந்து, நோய் தாக்காமல் உடலை ஆரோக்கிய மாக வைக்கும்.
வேர்க்கடலை

வேர்க் கடலையை குளிர் காலத்தில் அதிகம் சாப்பிட வேண்டும். அது வறுத்ததாகவோ, உப்பாகவோ அல்லது சாதாரண மாகவோ இருந்தாலும்,

அதை சாப்பிட்டால், உடலில் உள்ள வெப்பம் சரியான அளவு இருப்பதோடு, புரோட்டீனும் அதிகம் கிடைக்கும்.

கொய்யாப்பழம்

இந்த பழம் நோய் எதிர்ப்பு சக்தியை மட்டும் கொடுப்ப தில்லை, இதயத்தையும் ஆரோக்கியமாக வைக்கிறது.

அதிலும் கொய்யாவில் லைகோபைன் என்னும் பொருள் இருப்பதால், அது இதயத்தில் ஏற்படும் பிரச்சனையை தடுக்கிறது.

ஆகவே குளிர் காலத்தில் பிங்க் மற்றும் சாறுள்ள கொய்யாப் பழத்தை அதிகம் வாங்கி சாப்பிட வேண்டும்.
கொய்யாப்பழம்
கேரட்

கேரட்டை இயற்கையின் ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம். ஏனெனில் அந்த அளவு இதில் வைட்டமின் களான பி, சி, டி, ஈ மற்றும் கே உள்ளன. 

மேலும் இதில் உள்ள கரோட்டீன என்னும் பொருள் உடலினுள் செல்லும் போது வைட்டமின் ஏ-வாக மாறி விடுகிறது. 

எனவே இத்தகைய கேரட்டை சேர்ப்பது அவசியமா கிறது.

கிவி

இது மற்றொரு சிறப்பான வைட்டமின் சி நிறைந்துள்ள பழம். அதிலும் இந்த பழத்தின் மேல் சிறிது உப்பை தூவி, காலை வேளையில்

அல்லது மாலை வேளையில் சாப்பிட்டால், உடலுக்கு சத்து கிடைத்தது போன்றும் இருக்கும், வயிறு நிறைந்தது போன்றும் இருக்கும்.

சிக்கன் சூப்

சூப் பிடிக்காத வர்களே இருக்க மாட்டார்கள். அவ்வாறு சாப்பிடும் சூப்பில் சிக்கன் சூப் சாப்பிட்டால், குளிர் காலத்திற்கு இதமாக இருக்கும்.

கொக்கோ

கொக்கோவை அதிகம் சாப்பிட்டால், அதில் உள்ள அதிகமான ஃப்ளேவோனாய்டுகள், இதய நோய்க்கு வராமல் தடுக்கும்.

ஆகவே இந்த கொக்கோவை, உணவு உண்ட பின்பு சிறிது குடிப்பது நல்லது.
குளிர் கால உணவு
நட்ஸ் மற்றும் உலர் பழங்கள்

சாதாரணமான பழங்களை சாப்பிடுவதை விட, உலர் பழங்களை சாப்பிடுவ தால், உடலில் அளவுக்கு அதிகமான ஊட்டச் சத்துக்கள் கிடைக்கும்.

சொல்லப் போனால் நல்ல ஃப்ரஷ்ஷான பழங்களை விட, உலர் பழங்கள் தான் நல்லது.

ஆகவே இத்தகைய உணவுப் பொருட்களை நட்ஸ் உடன் தினமும் சேர்த்து சாப்பிட்டால்,

முக்கியமாக குளிர் காலத்தில் சாப்பிட்டால், கிருமிகள் எளிதில் உடலைத் தாக்காமல் தடுக்கும்.
குளிர் காலத்துல இந்த உணவுகளை மறக்காதீங்க | Remember these foods cool times ! குளிர் காலத்துல இந்த உணவுகளை மறக்காதீங்க | Remember these foods cool times ! Reviewed by Fakrudeen Ali Ahamed on October 14, 2015 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 www.esamayal.com. All rights reserved
close
𝙎𝙩𝙖𝙮 𝙃𝙤𝙢𝙚 🏠 𝙎𝙩𝙖𝙮 𝙎𝙖𝙛𝙚