அரிசி உப்புமா செய்வது | Rice Uppoma !





அரிசி உப்புமா செய்வது | Rice Uppoma !

தேவையானவை:

பச்சரிசி- ஒன்றரை கப்

உப்பு- தேவையான அளவு

தேங்காய்த்துருவல்- கால் மூடி

திரித்தத் துவரம்பருப்பு- ஒரு கைப்பிடி

தாளிக்க:

எண்ணெய்- 2 தேக்கரண்டி

கடுகு- 2 தேக்கரண்டி

கடலைப்பருப்பு- 3 தேக்கரண்டி

வெள்ளை உளுத்தம்பருப்பு- 2 தேக்கரண்டி

மிளகாய்வற்றல்- 2

பச்சைமிளகாய்- 1

முந்திரிப்பருப்பு- 10

இஞ்சி- 1 துண்டு

கறிவேப்பிலை- 2 இணுக்கு

அரிசி உப்புமா செய்வது

செய்முறை:

1. அரிசியை 3 மணி நேரம் சுடுதண்ணீரில் ஊற விட வேண்டும்.

2. அரிசியை ஈரம் போக உலர்த்தி மின்னரைப்பானில் உப்பு சேர்த்து நற நற பதத்திற்கு(மையாக அரைக்காமல்) அரைத்து எடுக்கவும்.

3. துவரம்பருப்பைத் திரித்துக் கொள்ளவும்.

4. ஒன்னரை கப் அரிசிக்கு 4 கப் தண்ணீரைத் தனியே சுட வைக்கவும்.

5. ஒரு வாணலியில் தாளிசப்பொருட்களைத் தாளித்துக் கொண்டு அரைத்த அரிசிக்கலவையைச் சேர்த்து கை பொறுக்கும் சூட்டில் வதக்கவும்.

6. கொதிக்கும் சுடு நீரை அரிசிக்கலவையுடன் கொட்ட வேண்டும், பிறகு திரித்தத் துவரம்பருப்பு(இதுவும் நற நற பதம்), காயம், தேங்காய்த் தூள் சேர்த்துக் கிளற வேண்டும்.

7. 8 நிமிடங்களில் அரிசி உப்புமா வெந்து விடும்.

8. பிறகு கறிவேப்பிலை தூவி எண்ணெய் விட்டு இறக்கவும்.

9. அரிசி உப்புமாவிற்குக் காரச்சட்னி அருமையான இணையுணவு.

10. இதே உப்புமாவைக் கொழுக்கட்டையாகப் பிடித்து அரிசி உப்புமா கொழுக்கட்டையாக்கலாம்.
Tags: