சுவையான தேங்காய்பால் கோழிக்குழம்பு செய்வது எப்படி?





சுவையான தேங்காய்பால் கோழிக்குழம்பு செய்வது எப்படி?

எலும்புகளை பலப்படுத்தி, சரும நோய்களை தீர்த்து, இரத்த சோகையை விரட்டும் தேங்காய் பால். உடலில் மாங்கனீசு குறைபாடு ஏற்பட்டால், நீரிழிவு நோய் வரும். 
தேங்காய் பால் கோழிக் குழம்பு
ஆனால் தேங்காய் பாலில் வளமான அளவில் மாங்கனீசு நிறைந்துள்ளது. தேங்காய் பாலில் போதுமான அளவு கால்சியம் இல்லாத போதிலும், பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. 

குறிப்பாக உடலில் உள்ள எலும்புகளை உறுதியாக்குவதற்கு பாஸ்பரஸ் முக்கிய ஊட்டச்சத்தாக விளங்குகிறது. அதிலும் பாஸ்பரஸை கால்சியத்துடன் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். 

போதுமான இரும்புச்சத்து உடம்பில் இல்லாததால், உலகத்தில் உள்ள பலருக்கும் இரும்புச்சத்து குறைபாடு இருக்கிறது. 

இரும்புச் சத்து குறைபாடு இருப்பதால்,  உடலானது ஹீமோ குளோபின் அதிகரிப்பதை தடுத்து நிறுத்தும். இதனால் இரத்த அணுக்களில் போதுமான அளவு ஆக்சிஜன் கிடைக்காமல், இரத்த சோகையை  உண்டாக்கும். 

ஒரு கப் தேங்காய் பாலில், உடம்புக்கு அன்றாடம் தேவைப்படும் இரும்புச்சத்தில் 25 சதவீதம் கிடைத்து விடுகிறது.

தமிழ் நாட்டில் அசைவ உணவு வகைகளில் நாம் காரம் அதிகமாகவே சேர்த்து உட்கொள் கிறோம். உணவருந்த எந்த உணவகத் திற்கு சென்றாலும்,பரிமாறு பவரிடம் நாம் கேட்கும் வழக்கமான கேள்வி,” இங்கு கார சாரமாக எது கிடைக்கும்?”.

ஆனால், கீழே கொடுக்கப் பட்டு இருக்கும் குழம்பு👈 வகையானது, “கார”க் குடும்பத்தை சேர்ந்தது அல்ல. இட்லியுடனோ, ஆப்பமுடன் சேர்த்தோ, இதனை உண்டால், ஒரு புதிய அனுபவம் நிச்சயம்.

தேவையான பொருட்கள்:

கோழி - அரை கிலோ

சமையல் எண்ணெய் - 5 தேக்கரண்டி அல்லது தேவையான அளவு.

வெங்காயம் (சிறியது) - ஒரு கிண்ணம் (பொடியாக நறுக்கியது)

தக்காளி - இரண்டு (பெரியது)

பச்சை மிளகாய் - மூன்று

வர மிளகாய் - இரண்டு

கருவேப்பிலை - ஒரு கொத்து

👉சிக்கன் தூள் - மூன்று தேக்கரண்டி

மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

கடுகு - அரை தேக்கரண்டி

தேங்காய் - ஒரு மூடி (தேங்காய் பால்)

செய்முறை:

சட்டியில் சமையல் எண்ணையை விட்டு கடுகு, பச்சை மிளகாய், வர மிளகாய், கருவேப்பிலை, சிறிய வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும். பின்னர், கோழி இறைச்சி சேர்த்து மேலும் வதக்கவும்.

பிறகு, மசாலா தூள் சேர்த்து, அதன் பிறகு சிறிது தண்ணீர்👈 தெளித்து கொள்ளவும். நன்கு மூடி வேக வைக்கவும்.

பாதியாக கோழி இறைச்சி வெந்ததும், தேங்காய் பாலை ஊற்றி, நன்கு கலக்கி மூடி வைக்கவும்.  தேங்காய்ப் பால் வற்றி, குழம்பு நிலைக்கு வரும் வரை வேக விட்டு காத்திருக்கவும்.

பிறகு உங்களுக்கு தேவையான பதத்தில் இறக்கி எடுத்துக் கொள்ளவும். இறக்கி வைத்தவுடன், அதன் மேல் கொத்த மல்லி தழை தூவி பரிமாறவும்.

குறிப்பு: 👉இறைச்சியை சமைக்கும் முன், தயிரில் கழுவுவது நல்லது. இதனால், இறைச்சி மிருதுவாக இருக்கும்.
Tags: