சுவையான நாட்டுக்கோழி மிளகு குழம்பு செய்வது எப்படி?





சுவையான நாட்டுக்கோழி மிளகு குழம்பு செய்வது எப்படி?

சளி, இருமல் வந்துவிட்டால், அதிலிருந்து இயற்கையான வழிமுறைகளைப் பயன்படுத்தியே மீண்டுவிடலாம். தண்ணீரை சூடாக்கித் தான் குடிக்க வேண்டும்.  
நாட்டுக்கோழி மிளகு குழம்பு
வெந்நீருக்கு தொண்டையில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும் தன்மை உண்டு. இது சளி, காய்ச்சலுக்குக் காரணமான தொற்றுகளை நீக்கவும் உதவும். 

மிளகுத்தூளுடன் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் இருமல் உடனே நிற்கும். பத்து துளசி இலைகளுடன் ஐந்து மிளகு, 200 மி.லி தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்துக் குடித்து வந்தால் நெஞ்சுச் சளிக் கட்டுதல் நீங்கும்.

நான்கு பூண்டு பல்லுடன் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றிச் சேர்த்து பூண்டைப் பொரித்து, சூடு ஆறுவதற்குள் இதைச் சாப்பிட்டுவிட வேண்டும். பூண்டை நன்றாக  நசுக்கி குழம்பு அல்லது சூப்பில் போட்டும் பயன்படுத்தலாம். 

சளி, இருமலை இயற்கை வழியில் நீக்கும். கருமிளகு இருமல், சளிக்கு மிக நல்ல மருந்து. கருமிளகு டீ குடிப்பது தொண்டை வலியைக் குறைக்கும். 

ஒரு கப் வெந்நீரில் இரண்டு டேபிள்ஸ்பூன் தேன், சிறிதளவு கருமிளகு சேர்த்துக்கொள்ளவும். இதை அப்படியே மூடி வைக்கவும். 15 நிமிடங்களுக்குப் பிறகு இதைக் குடிக்கலாம். 

நாட்டுக் கோழி என்றாலே தனிச்சுவை தான். இதை நாட்டுக்கோழி மிளகு குழம்பு என்று சொல்வதை விட நாட்டுக்கோழி மிளகு ரசம் என்று சொல்வதே பொருத்தம்.
எங்கள் கிராமத்தில், யாரையேனும் சளிப் பிடித்து வாட்டி வதைத்தால், இந்த குழம்பு தான். இதை செய்து சுட சுட சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தேவையானப் பொருட்கள்:
1) நாட்டுக்கோழி  - அரைக் கிலோ

2) சிறிய வெங்காயம்  - 50 கிராம்

3) தக்காளி - 2

4) கொத்தமல்லித்தூள்  - 2 தேக்கரண்டி

5) வர மிளகாய் - 3

6) மிளகு - 3 தேக்கரண்டி (வறுத்துப் பொடியாக அரைத்தது)

7) தேங்காய்👈 - நான்கு துண்டுகள்

8 ) கடுகு - தேவையான அளவு

9) நல்லெண்ணெய் - தேவையான அளவு

10) உப்பு & கருவேப்பிலை & கொத்து மல்லித் தழை - தேவையான அளவு

செய்முறை : 

முதலில், சிறிய வெங்காயம், தக்காளி மற்றும் வர மிளகாயை எண்ணையில் விட்டு நன்கு வதக்கவும். 

இந்த கலவை சூடு தணிந்து, ஆறியவுடன், தேங்காய் மற்றும் கொத்து மல்லித் தூள் சேர்த்து, நன்றாக அரைத் தெடுக்கவும்.

அதைத் தனியே எடுத்து வைத்துக் கொண்டு, வாணலியில் எண்ணெய் தேவையான அளவு ஊற்றி கடுகு சேர்த்து, வர மிளகாயை போடவும். 

நன்கு வறுத்து அரைத்து வைத்த மிளகுத் தூளை இதில் போடவும். பின்னர், நாட்டுக் கோழியுடன் கருவேப்பிலை சேர்த்து, வாணலியில் போட்டு வதக்கவும். 
இப்போது, முதலில் அரைத்து வைத்த வெங்காய தக்காளி கலவையை நாட்டுக் கோழியோடு சேர்த்து நன்கு கலக்கி, அடுப்பில் நன்றாக வேக வைக்கவும்.

தேவையான அளவு உப்பு மற்றும் கொத்து மல்லித் தழை சேர்த்து, நல்ல கொதி வந்தவுடன், அதில் லேசாக மிளகுத் தூளை தூவி விடவும். 

இதற்குப் பிறகு, ஒரு கொதி வரும் வரை வாணலியை அடுப்பில் வைத்து விட்டு, பின்பு, இறக்கி சூடாக பரிமாறவும். சுவை மிகுந்த, சூடான, காரசாரமான நாட்டுக் கோழி 👉மிளகு குழம்பு தயார்.
Tags: