நண்டில் ரத்த சிவப்பணுக்களின் உற்பத்திற்கு தேவையான விட்டமின் B12 வளமாக நிறைந்துள்ளது. 
30 வகை நண்டு சமையல் ரெசிபி / Crab Varieties Recipes !
எனவே நண்டு தினமும் சாப்பிட்டு வந்தால், ரத்த சோகை பிரச்சனை ஏற்படுவதை தடுக்கிறது. 

நமது உடம்பில் செலினியம் குறைவாக இருந்தால், அது மூட்டுகளில் வீக்கத்தை ஏற்படுத்துவதோடு, கடுமையான வலியையும் ஏற்படுத்தும். 

எனவே செலினியம் நிறைந்த நண்டை சாப்பிட்டு வந்தால், முடக்கு வாதத்தில் இருந்து விரைவில் விடுபடலாம். 

நண்டு சாப்பிடுவதால், அது நமது வளர்ச்சி மற்றும் எலும்புகளுக்கு மிகவும் இன்றிமையாதது. 
எனவே குழந்தைகளுக்கு நண்டு கொடுப்பது மிகவும் நல்லது. மேலும் இது நமது முடி, நகம், சருமம் போன்றவற்றின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. 

நண்டில் உள்ள ஜிங்க், நமது சருமத்தில் இருக்கும் எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்தும் தன்மைக் கொண்டது. எனவே நமது முகத்தில் பருக்கள் ஏற்படுவதையும் தடுக்கிறது. 
நண்டில் நியாசின் அதிகமாக இருப்பதால், நமது உடம்பில் உள்ள நல்ல கொலஸ்ட்ராலை அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரை கிளிசரைடுகளின் அளவை குறைக்கச் செய்கிறது. 

நண்டில் இருக்கும் மக்னீசியம், நமது நரம்பு மற்றும் தசைகளின் இயக்கத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. 

எனவே நண்டு நமது உடலின் ஏற்படும் ரத்த அழுத்தத்தின் அளவை சீராக்குகிறது. கருத்தரிக்க நினைக்கும் பெண்கள், நண்டை தங்களின் உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.