தொக்கு… சொல்லும் போதே நாவில் நீர் ஊற வைக்கும் விசேஷ உணவு அயிட்டம்! இன்றைய பிஸியான வாழ்க்கைச் சூழலில்,
30 வகை தொக்கு  | 30 Veriety Thokku
எதையும் ஆற அமர செய்து சாப்பிட நேரமின்றி தவிக்கும் சகோதரிகளு க்கு, சந்தேகமே இல்லாமல் தொக்கு ஒரு வரப்பிரசாதம் தான்.

காலையில் டிபனுக்கு, மதியம் சாதத்துக்கு, மீண்டும் இரவு உணவுக்கு என்ன சைட் டிஷ் செய்வது என்று குழம்பித் தவிப்பவர்களுக்கு, 

‘நானிருக்க பயமேன்’ என்று அபயக்கரம் நீட்டும் சிம்பிளான சைட் டிஷ் – தொக்கு! பிரெட்டின் மேல் தடவி, ஸாண்ட்விச் செய்வதற்கும் தொக்கு உதவும். 

சாதாரண மாக நாம் சமையலு க்கு பயன்படுத்தும் பொருள்களை யும் காய்கறி களையும் வைத்தே இனிப்பு, காரம், கசப்பு, உவர்ப்பு, புளிப்பு, துவர்ப்பு என அறுசுவைகளில் தினம் ஒரு தொக்கு. 

இவற்றைத் தயாரிக்க ஆகும் நேரமும் குறைவு. செலவும் அதிகமில்லை. 

தினம் ஒரு தொக்கு செய்து பரிமாறிப் பாருங்கள், ‘தொக்கு’ப் பொடி போட்டது போல குடும்பமே உங்களைச் சுற்றி வரும். 

குறிப்பு: 
இந்தத் தொக்கு வகைகளை, ஒரு வாரம் முதல் பத்து நாட்கள் வரை வைத்து உபயோகிக்க லாம். ஃப்ரிட்ஜிலும் வைக்கலாம். 

கொடுக்கப் பட்டிருக்கும் அளவுகளில் உப்பு, புளி, காரம் போன்ற வற்றை அவரவர் சுவைக்கேற்ப கூட்டியோ, குறைத்தோ சேர்த்துக் கொள்ளலாம். 

ஆனாலும், இவை மூன்றும் சிறிது தூக்கலாக இருந்தால் தான் தொக்கு ருசிக்கும்!