சூப்பரான உளுத்தம் பால் செய்வது எப்படி?





சூப்பரான உளுத்தம் பால் செய்வது எப்படி?

0

ரோட்டு கடைகளில் உளுத்தம் பால் வாங்கி சாப்பிட்டு இருப்போம் அந்த சுவையே தனி சுவைத்தான். அது மட்டும் அல்லாமல் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானதும் கூட. 

சூப்பரான உளுத்தம் பால் செய்வது எப்படி?
இந்த உளுத்தம் பாலை ஆரோக்கியமானதும் நேரங்களில் குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம். பெண்கள் இதை சாப்பிடுவதால் உடலுக்கு நல்லது. இந்த உளுத்தம் பாலை செய்வதும் மிகவும் சுலபம் தான். 

குறைந்த நேரத்திலே செய்து விடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவாங்க.

இந்த உளுத்தம் பாலை ரோட்டு கடை சுவையில் எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப் பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

தேவையான பொருட்கள் :  .

பால் காய்த்தது - ½ கப்  

உளுந்து - ¼ கப்  

நாட்டு சக்கரை - 2½ டேபிள் ஸ்பூன்  

சுக்கு - ¼ டீஸ்பூன், 

ஏலக்காய் பொடித்த பொடி - ¼ டீஸ்பூன்

செய்முறை : .

சூப்பரான உளுத்தம் பால் செய்வது எப்படி?

முதலில் குக்கரில் உளுந்தை சேர்த்து பால் விசில் வேக விட்டு எடுத்துக் கொள்ளவும்.  பிறகு அதனை ஆற விட்டு எலக்ட்ரிக் பீட்டர், அல்லது மிக்சியில் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.  

பிறகு அதே குக்கரை அடுப்பில் வைத்து அரைத்த உளுந்தை சேர்த்து நாட்டு சக்கரை, சுக்கு, ஏலக்காய் பொடி சேர்த்து கலந்து மிதமான தீயில் 5 அல்லது 6 நிமிடம் கொதிக்க விடவும். 

பிறகு கெட்டிப்பதம் வந்ததும், பால் சேர்த்து கலந்து இறக்கவும்.  இப்பொழுது ஆரோக்கியமான உளுந்து பால் தயார்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)