வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடிய பழங்கள் தெரியுமா?

வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடிய பழங்கள் தெரியுமா?

0

தற்போது உள்ள காலக்கட்டத்தில் பெரும்பாலான நபர்கள் சந்திக்கக் கூடிய பிரச்சினையாக உடல் பருமன் உள்ளது. இதை சரி செய்வதற்கு பலரும் டயட்டில் ஈடுபட்டுள்ளனர். 

வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடிய பழங்களை தெரியுமா?
டயட் காரணமாக காலை உணவை சாப்பிடாமல் வெறும் வயிற்றில் பழங்களை மட்டும் சாப்பிட்டு வருகின்றனர். ஆனால் வெறும் வயிற்றில் எல்லா பழங்களையும் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். 

ஆனால் சில பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். தர்பூசணி பழம், பப்பாளி பழம், அன்னாசி பழம், ஆப்பிள், கிவி, பேரிக்காய் உள்ளிட்ட ஆறு பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடலாம். 

இந்த பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. அப்படியாக என்னென்ன பழங்களை, வெறும் வயிற்றில் சாப்பிடலாம், அதனால் என்ன பலன் என்பதையும் பார்க்கலாம்.

உணவு மூலம் உடலில் சேரும் கொழுப்பை கரைக்க !

தர்பூசணி பழம் (Watermelon): 

வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடிய பழங்களை தெரியுமா?

மக்கள் அனைவரும் சுட்டெரிக்கப் போகும் வெயில் காலத்திற்கு தயாராகி வருகிறார்கள். வழக்கம் போலவே வெயில் காலத்தில் சாறு நிறைந்த தர்பூசணி, உடலை குளிர்விக்கவும், புத்துணர்ச்சியாக்கிறது. 

தர்பூசணி பழத்தில் உள்ள 92 சதவீத நீர், உடலுக்கு ஈரப்பதத்தை அளிக்கிறது. தர்பூசணியில் உள்ள லைகோபீன் இதயம் மற்றும் சருமத்தை பாதுகாக்க உதவுகிறது. இதில் எலட்ரோலைட் இருப்பதால், உடலில் நீரிழப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது.

அன்னாசி பழம் (PineApple): 

அன்னாசிப்பழம் பார்ப்பதற்கு கரடுமுரடான பூப்போல இருந்தாலும், உள்ளே பலாப்பழசுளை போல இனிப்பாகவும், சற்று புளிப்பு சுவையுடன் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த அன்னாசி பழம், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், எலும்புகளை வலுப்படுத்தவும் உதவுகிறது.

மயக்கம் (fainting) மயக்க உணர்வு (dizziness) போக்க எளிய வழி !

ஆப்பிள் (Apple): 

வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடிய பழங்களை தெரியுமா?

சுவைமிக்க இதன் பழம் குமளிப்பழம், ஆப்பழம், சீமையிலந்தம்பழம், அரத்திப்பழம், ஆப்பிள் அல்லது அப்பிள் என அழைக்கப்படுகின்றது. 

தினமும் ஒரு ஆப்பிள் என்பது, மருத்துவரை அணுகுவதை விலக்கி வைக்கிறது. ஆப்பிளில் உள்ள பெக்டின்கள் செரிமானத்திற்கு உதவுகின்றன. 

மேலும் பசியை கட்டுப் படுத்துக்கின்றன. ஆப்பிளில் உள்ள குவெர்செடின் ஆன்டி ஆக்ஸிடன்கள் மூளை செயல்பாட்டிற்கு உதவுகின்றன.

பப்பாளி (Papaya): 

பப்பாளி பழம் சுவையில் மட்டுமல்ல ஆரோக்கியத்திலும் சிறந்த நன்மைகளை தரக்கூடியது. பப்பாளி தற்போது எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் பழம். மலிவானது. இனிப்பானது. எல்லோரும் அறிந்தது. சத்துக்கள் மிகுந்தது.

உடல் எடையை குறைக்கப்பதற்கு உதவும் பப்பாளியில், விட்டமின் ஏ, விட்டமின் சி, விட்டமின் ஈ உள்ளன. பப்பாளியில் உள்ள பப்பெய்ன் மற்றும் சைமோபபைன் நொதிகள், உணவு செரிமானத்திற்கும், மலச்சிக்கலை தடுக்கவும் உதவுகின்றன.

பேரிக்காய் (Pear): 

வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடிய பழங்களை தெரியுமா?

ஆப்பிளைப் போன்றே அதிக சத்துக்களைக் கொண்ட பழம் தான் பேரிக்காய். பேரிக்காயை நம் நாட்டின் ஆப்பிள் என்று கூடச் சொல்வார்கள்.

பேரிக்காயில் உள்ள விட்டமின் சி, விட்டமின் கே, பொட்டாசியம் மற்றும் தாமிரம் போன்றவை சிறுநீரகங்கள், குடல் மற்றும் இதயம் செயல்பாட்டை மேம்படுத்துகின்றன. மேலும் செரிமானத்தை மேம்படுத்துகின்றன.

முதல் நாள் உணவை மறு நாள் சாப்பிடக் கூடாது ஏன்?

கிவி (Kiwi): 

கிவி பழம் பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும் அதன் நன்மைகள் மிகவும் பெரியது. இது முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழமாகும். 

கிவி பழத்தை ஒருவர் தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள வைட்டமின் சி நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும்.

விட்டமின்கள், தாதுக்கள், என்சைம்கள் நிறைந்த கிவி, செரிமானம் மற்றும் சரும பராமரிப்புக்கு உதவுகிறது. மேலும் உடலிற்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)