தீபாவளிக்கு திகட்ட திகட்ட மலாய் லட்டு செய்வது எப்படி?

தீபாவளிக்கு திகட்ட திகட்ட மலாய் லட்டு செய்வது எப்படி?

0

மலாய் லட்டு. திகட்ட திகட்ட தீபாவளி கொண்டாட கட்டாயம் செய்ய வேண்டிய இனிப்பு. அனைவரும் விரும்பும் இந்த இனிப்பை இந்த தீபாவளிக்கு செய்து மகிழ்ந்திருங்கள்.

தீபாவளிக்கு திகட்ட திகட்ட மலாய் லட்டு செய்வது எப்படி?
மலாய் லட்டு பால் பவுடருடன் சில பொருட்கள் மட்டுமே சேர்த்து செயயக்கூடிய ஒரு சிறப்பு தீபாவளி இனிப்பு ஆகும். இதை வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். 

குறிப்பாக பால் பவுடர், நெய் எல்லாம் இருப்பதால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

உலகில் எவராலும் ஏற முடியாத ஒரு சிகரம் !

தேவையான பொருட்கள் . :

பால் பவுடர் – 1 கப்

நெய் – கால் கப்

முந்திரி – 10

உலர் திராட்சை – 2 ஸ்பூன்

ஏலக்காய் – 2

சர்க்கரை – கால் கப்

செய்முறை . :

தீபாவளிக்கு திகட்ட திகட்ட மலாய் லட்டு செய்வது எப்படி?

ஒரு கடாயில் நெய் சேர்த்து சூடானதும், முந்திரி பருப்புக்களை வறுத்து பொன்னிற மானதுடன் எடுத்து தனியாக வைத்துவிட வேண்டும். அடுத்ததாக உலர் திராட்சை களையும் உப்பி வரும் வரை நெய்யில் சேர்த்து வறுத்து எடுத்து தனியாக வைத்துவிட வேண்டும்.
நார்ச்சத்து எடுத்துக் கொள்பவர் களுக்கான ஆலோசனைகள்

சர்க்கரையையும், ஏலக்காயையும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக பொடித்துக் கொள்ள வேண்டும். நல்ல மையாக பொடி செய்துவிட வேண்டும்.

முந்திரியையும் பொடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடித்துக் கொள்ளலாம் அல்லது கவரில் போட்டு சப்பாத்தி தேய்க்கும் கட்டையால் உருட்டியும் உடைத்துக் கொள்ளலாம்.

ஒரு பெரிய பாத்திரத்தில் பால் பவுடர், பொடித்த சர்க்கரை, நுணுக்கிய முந்திரி, திராட்சை என அனைத்தையும் ஒவ்வொன்றாக சேர்க்க வேண்டும்.

கடைசியாக உருகிய நெய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின்னர் சிறுசிறு லட்டுகளாக பிடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். 

இது உருண்டையாக பிடித்து வர சிறிது நேரமும், கொஞ்சம் மெனக்கெடலும் தேவை. எனவே நன்றாக உருட்டி பிடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். 

கைகளில் கிளவுஸ் அணிந்து கொண்டு லட்டு பிடித்தால் லட்டு விரைவாகவும், நல்ல உருண்டை வடிவத்திலும் கிடைக்கும்.

குறிப்புகள் . :

முதலில் கொடுத்துள்ள நெய்யை சேர்த்துக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் நெய் சிறிது கூடுதலாக சேர்த்துக் கொள்ளலாம்.

அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கு யோகா பயிற்சி !

உருண்டை பிடிக்கும் போது முதலில் கைகளில் ஒட்டும், நல்ல வடிவமும் கிடைக்காது. ஆனால் தொடர்ந்து முயற்சிக்க உருவம் வந்து விடும். எனனே பிடித்து, பிடித்து உருட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)