தீபாவளிக்கு கலாகண்ட் ரெசிபி செய்வது எப்படி?





தீபாவளிக்கு கலாகண்ட் ரெசிபி செய்வது எப்படி?

0

கலாகண்ட், பேரே வித்யாசமா இருக்கே? இது எப்டி இருக்கும்? இதோ ரெசிபி இருக்கு இந்த தீபாவளிக்கு செஞ்சு அசத்திடுங்க.

தீபாவளிக்கு கலாகண்ட் ரெசிபி செய்வது எப்படி?
தீபாவளி நெருங்கி வருகிறது. இந்த தீபாவளிக்கு வித்யாசமா என்ன ஸ்வீட் செய்யலாம் என்ற குழப்பத்தில் இருக்கும் போது, இது போன்ற புதிய ஸ்வீட்களை முயற்சித்து உங்கள் வீட்டில் உள்ளவர்களை அசத்தலாம்.

தேவையான பொருட்கள் . :

ஏலக்காய் – 4 (விதை நீக்கியது)

பன்னீர் – 200 கிராம் (துருவியது)

கண்டன்ஸ்ட் மில்க் – 400 கிராம்

சர்க்கரை – 1 ஸ்பூன்

பிஸ்தா – 4 டேபிள் ஸ்பூன் (பொடித்தது)

சமையல் ரோஸ் எசன்ஸ் – சில துளிகள்

செய்முறை . :

தீபாவளிக்கு கலாகண்ட் ரெசிபி செய்வது எப்படி?

முதலில் சர்க்கரையுடன் சேர்த்து ஏலக்காயை பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். அடிக்கனமான பாத்திரத்தில், துருவிய பன்னீர் மற்றும் பால் சேர்த்து நன்றாக கிளற வேண்டும். 

அடுப்பு மிதமான தீயில் இருக்க வேண்டும். தொடர்ந்து கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். கொதிக்கத் துவங்கியவுடன், அடுப்பை குறைத்து விட்டு, அடிபிடித்து விடாமல் தொடர்ந்து கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். 

5 முதல் 7 நிமிடத்தில் இந்தக் கலவை கெட்டியாகி வரும். ஓரங்களில் விடுபட துவங்கும் வரை கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். மிருதுவான, மணல் மணலாக திரண்டு வரவேண்டும். 

கரண்டியில் மோளும் பதத்தில் இருக்க வேண்டும். தீயை குறைத்து, ரோஸ் வாட்டரை சேர்க்க வேண்டும். கடாயிலே ஆற வைத்து கெட்டியாகவிட வேண்டும்.

வெள்ளை பூசணி சாம்பார் செய்வது எப்படி?

ஒரு பேக்கிங் ட்ரேயில் பார்ச்மென்ட் பேப்பரை வைத்து, ஆறிய கலாகண்டை பரப்பி விட வேண்டும். 2 சென்டி மீட்டர் உயரத்தில், செவ்வக வடிவில் வெட்டி எடுக்க வேண்டும்.

அதில் பொடித்த பிஸ்தாக்களை மேலே தூவி விட வேண்டும். பின்னர் ஃபிரிட்ஜில் வைத்து குளுமையாக்க வேண்டும். நன்றாக கெட்டியானவுடன் வெளியே எடுத்து ஆற வைத்து சிறுசிறு துண்டுகளாக வெட்டி பரிமாற வேண்டும்.

இந்த துண்டுகளை தனித்தனியாக எடுத்து 4 முதல் 5 நாட்கள் வரை ஒரு காற்றுப் புகாத டப்பாவில் அடைத்து வைத்துக் கொள்ளலாம்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)