அருமையான கொத்தமல்லி இலை டீ குடியுங்கள் !





அருமையான கொத்தமல்லி இலை டீ குடியுங்கள் !

0

உணவின் சுவையை அதிகரிக்கும் இந்த கொத்த மல்லியில் உடலுக்கு நன்மை தரும் பல ஊட்டச் சத்துக்களும் நிறைந்துள்ளன. 

அருமையான கொத்தமல்லி இலை டீ குடியுங்கள் !
மணம், சுவை மற்றும் சத்துக்கள் நிறைந்த இந்த இலைகளைக் கொண்டு சட்னி, ஜூஸ், கொத்தமல்லி சாதம் என பல விதமான உணவுகளை சமைக்கலாம். 

கொத்த மல்லியை உணவை அலங்கரிப்பதற்காக பயன்படுத்துவதற்கு பதிலாக சட்னியாகவோ அல்லது சாதத்துடனும் கலந்து சாப்பிட்டால் கூடுதல் நன்மைகளை பெற முடியும்.

கொத்தமல்லி இலைகளை சமையலுக்கு பயன்படுத்துவதை தவிர அதனை டீயாகவும் எடுத்துக் கொள்ளலாம். இந்த டீயை தினமும் குடித்து வர உடல் ஆரோக்கியம் மேம்படும். 

இது மறதியை கட்டுபடுத்தி நினைவாற்றலை அதிகரிக்க உதவுகிறது. மேலும் வாய்ப்புண்களை குணப்படுத்தவும் சுவாச புத்துணர்ச்சியை அதிகரிக்கவும் செய்கின்றன. 

இருப்பினும், சிலர் கொத்தமல்லி இலைகளை அதிகம் விரும்ப மாட்டார்கள். இதனால் கொத்தமல்லி இலைகளை சமைக்கும் உணவில் சேர்க்க மாட்டார்கள். மேலும் கொத்தமல்லி சட்னியை அதிகம் விரும்ப மாட்டார்கள். 

நீங்கள் அவர்களில் ஒருவராக இருந்தால், உங்கள் ஆரோக்கியத்தை அதிகரிக்க கொத்தமல்லி தேநீர் குடிப்பதை பழக்கமாக்கி கொள்ளலாம். இதனை தயாரிப்பது என்பது மிகவும் எளிது.

கொத்தமல்லி டீயின் செய்முறை மற்றும் அதன் ஆரோக்கிய நன்மைகளை இன்றைய பதிவில் காணலாம்.

ஆம்பூர் மட்டன் பிரியாணி செய்முறை !

தேவையான பொருட்கள் : .

கொத்தமல்லி இலைகள் - ¼ கப்

அன்னாசி பூ - 1

மஞ்சள் பொடி - 1 சிட்டிகை

தண்ணீர் - 1 ½ கப்

செய்முறை : .

அருமையான கொத்தமல்லி இலை டீ குடியுங்கள் !

முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். கொதிக்கும் நீரில் அன்னாசிப்பூ மற்றும் மஞ்சள் பொடி சேர்த்து ஒரு நிமிடத்திற்கு கொதிக்க விடவும்.

இதனுடன் கொத்தமல்லி இலைகளை சேர்க்கவும். பாத்திரத்தை மூடி, 2-3 நிமிடங்களுக்கு கொதிக்க வைத்து அடுப்பை அணைக்கவும்.

மலையாளிப் பெண்கள் அழகாக இருக்க காரணம்?

இனிப்பு சுவையை விரும்புபவர்கள் இந்த டீயில் சிறிதளவு தேன் கலந்து குடிக்கலாம். டீயின் சூடு தணிந்த பின்னரே தேன் சேர்க்க வேண்டும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)