சருமம் பொலிவு பெற, எடை குறைய ஒரு ஸ்பூன் சோம்பு !





சருமம் பொலிவு பெற, எடை குறைய ஒரு ஸ்பூன் சோம்பு !

0

நம் நாட்டில் கிடைக்கக் கூடிய ஒவ்வொரு மசாலா பொருட்களிலும் தனித்துவமான சுவையும், மணமும், மருத்துவ நன்மைகளும் நிறைந்துள்ளன.

சருமம் பொலிவு பெற, எடை குறைய ஒரு ஸ்பூன் சோம்பு !
நன்மை தரும் மசாலா பொருட்களில் சோம்பும் நிச்சயமாக இடம்பெறும். சோம்பின் மிகச்சிறந்த நன்மை என்ன தெரியுமா? இது உங்களுடைய நினைவாற்றலை மேம்படுத்த உதவும். 

இரத்த சோகை, அஜீரணம், வாயு, மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு மற்றும் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு சோம்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

சோம்பில் கால்சியம், சோடியம், இரும்புச்சத்து, பொட்டாசியம் போன்ற ஊட்டச் சத்துக்கள் நிறைந்துள்ளன. இதைத் தவிர சோம்பில் ஆன்டி ஆக்ஸிடன்ட், ஆன்டி பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் காணப்படுகின்றன. 

இது உங்களை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ளவும் உதவும். தினமும் ஒரு ஸ்பூன் சோம்பு சாப்பிடுவதால் கிடைக்கக் கூடிய நன்மைகளை இன்றைய பதிவில் காணலாம்.

பெண்களுக்கு சினைப்பை கட்டிகள் இருப்பதற்கான அறிகுறிகள்.

உடல் எடையை குறைக்க உதவும்.

சருமம் பொலிவு பெற, எடை குறைய ஒரு ஸ்பூன் சோம்பு !

சோம்பு, உடல் எடையை குறைக்க சிறந்தது. இந்த அதிசய மசாலா பொருளானது உங்களுடைய வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவும். 

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் ஒரு கப் சோம்பு தண்ணீரை தங்கள் தினசரி உணவு முறையில் செய்து கொள்ளலாம்.

வாயை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவும்.

இந்தியாவில் ஒவ்வொரு உணவகத்திலும் உணவிற்கு பிறகு சோம்பு வழங்கப் படுகிறது. சோம்பில் உள்ள அத்தியாவசிய எண்ணெய்கள் வாய் துர்நாற்றத்தை தடுக்க உதவுகின்றன. 

வெங்காயம் மற்றும் பூண்டு அதிகம் சேர்த்த உணவுகளை சாப்பிட்ட பிறகு வாயில் துர்நாற்றம் ஏற்படுவது இயல்பானது. இது போன்ற உணவுகளை சாப்பிட்ட பிறகு ஒரு ஸ்பூன் சோம்பை சாப்பிட்டால் துர்நாற்றத்தை தடுக்கலாம். 

சோம்பை சாப்பிடுவதற்கு பதிலாக சோம்பு சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரை மவுத்வாஷ் ஆகவும் பயன்படுத்தலாம்.

பெண்கள் டென்ஷன் இல்லாமல் வேலை செய்ய என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

முகப்பருவை தடுக்கும்.

பல பெண்களுக்கும் முகப்பரு ஒரு பிரச்சனையாகவே இருந்து வருகிறது. இதற்கான ஒரு சிலர் மருந்துகள் அல்லது சிகிச்சைகளை எடுத்துக் கொள்கிறார்கள். 

முகப்பருக்களை தடுக்க தினமும் ஒரு ஸ்பூன் சோம்பை மென்று சாப்பிடலாம். சோம்பில் உள்ள ஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகள் முகத்திற்கு இயற்கையான பொலிவை கொடுக்கின்றன.

செரிமானத்திற்கு உதவும்.

சருமம் பொலிவு பெற, எடை குறைய ஒரு ஸ்பூன் சோம்பு !

அஜீரண பிரச்சனைகளை தடுக்க உணவிற்கு பிறகு சோம்பை மென்று சாப்பிடலாம். இவ்வாறு செய்வதால் வாயு, வயிற்றுப் பொருமல் போன்ற வயிறு சார்ந்த பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம்.

இரத்தத்தை சுத்திகரிக்க உதவும்.

சோம்பில் உள்ள நார்ச்சத்துக்களும், அத்தியாவசிய எண்ணெய்களும் உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை நீக்கி இரத்தத்தை சுத்திகரிக்க உதவுகின்றன. 

சோம்பு நீர் குடிப்பது இரத்தத்தில் உள்ள அதிகப் படியான யூரிக் அமிலத்தை வெளியேற்றவும், குறைக்கவும் உதவுகிறது. 

இது கல்லீரலில் உள்ள கொழுப்புகளின் செரிமானத்தையும் ஆதரிக்கிறது. சோம்பு நீரை குடித்து வர சிறுநீரக தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பையும் குறைக்கலாம்.

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும்.

சருமம் பொலிவு பெற, எடை குறைய ஒரு ஸ்பூன் சோம்பு !

சோம்பில் உள்ள பொட்டாசியம் இதயத்துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

எலும்புகளுக்கு நன்மை தரும்.

வலுவான எலும்புகளை பெற தினமும் ஒரு ஸ்பூன் சோம்பை எடுத்துக் கொள்ளலாம். இதில் உள்ள கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின் K போன்ற சத்துக்கள் எலும்புகளை வலுவாக்க உதவுகின்றன.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)