மண்பானையில் சமையல் செய்வதால் ஏற்படும் நன்மைகள் என்ன?





மண்பானையில் சமையல் செய்வதால் ஏற்படும் நன்மைகள் என்ன?

0

முன்பெல்லாம், நாம சமைக்கிற பாத்திரம் மட்டுமில்லாமல், தண்ணீர் பாத்திரத்துல இருந்து சாப்பிடக் கூடிய தட்டு வரைக்கும் எல்லாமே மண் பாத்திரங்கள்தாம். 

மண்பானையில் சமையல் செய்வதால் ஏற்படும் நன்மைகள் என்ன?
இரும்பு, பித்தளை, வெண்கலம்னு என பல பாத்திரங்கள் வந்தாலும் அதை வாங்குற சக்தி இல்லாதவங்களுக்கு கையில கிடைச்ச மண்ணைப் பிசைஞ்சி செஞ்ச பாத்திரங்கள் தான் வரப்பிரசாதமா இருந்துச்சு. 

ஆனா, இந்த நாகரிக காலத்துல, கிராமங்கள்ல கூட மண்பானையில சமையல் செய்றது குறைஞ்சு போச்சு. அலுமினியப் பாத்திரம், எவர்சில்வர் பாத்திரங்கள்ல தான் சமைக்கிறாங்க.

சத்துகளுடன், நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கக் கூடியவை இயற்கை உணவுகள். அவற்றை முறையாகச் சமைத்து உண்ணும் போது அதன் முழுச்சத்தும் நம் உடலுக்குக் கிடைக்கும். 

மண்பானைச் சமையல் என்பது மரபு மட்டுமல்ல, உணவின் தன்மை மாறாமல், சுவையை அதிகரிக்கக் கூடியது. மண்பானைப் பாத்திரத்தில் சமைக்கப்படும் உணவு எளிதில் செரிமானாகும். 

இப்போது கிடைக்கும் பாத்திரத்தில் உலோகத் தன்மை இருப்பதால், உணவின் தன்மையை மாற்றி விடுகிறது. பொதுவாக, உணவைச் சமைக்கும் போது, உணவில் உள்ள தாதுக்கள் உள்ளிட்ட முக்கியமான சத்துகள் ஆவியாகி விடும். 

குறிப்பாக, பச்சைக் காய்கறிகளில் உள்ள குளோரோஃபில் (Chlorophyll) எளிதில் ஆவியாகி விடும். ஆனால், மண்பானையில் சமைக்கும் போது அதிலுள்ள சத்துகள் வீணாகாமல் அப்படியே கிடைக்கும்.

மண் பானையில் உள்ள நுண் துளைகளால் உணவுக்குள் வெப்பம் சீராகவும், சமநிலையிலும் ஊடுருவும். 

இதனால் மண் பானைகளில் சமைக்கும் உணவு ஆவியில் வேக வைத்த உணவைப் போன்ற தன்மையைப் பெறும். இது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. 

மண்பானையில் சமையல் செய்வதால் ஏற்படும் நன்மைகள் என்ன?

மண்பானைச் சமையலுக்கு அதிக எண்ணெய் தேவைப்படாது. அது உணவுக்குத் தேவையான எண்ணெயை மட்டுமே எடுத்துக் கொள்ளும். இதுவும் உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியக் காரணம். 

இன்றைக்கு நவீன வாழ்க்கை முறையில் சமைக்க ஒரு பாத்திரம், சூடாகப் பராமரிக்க ஹாட்பாக்ஸ், உணவு கெட்டுப் போகாமல் இருக்க ஃபிரிட்ஜ் எனத் தனித்தனியாகப் பொருள்களைப் பயன்படுத்துகிறோம். 

ஆனால், இவை எதுவும் இல்லாத காலத்திலும் மண்பானையே ஓர் இயற்கை ரெப்ஃரிஜிரேட்டராக இருந்தது. இதில் உள்ள சிறிய நுண் துளைகள் வழியே அதன் உள்ளே இருக்கும் நீர் தொடர்ந்து ஆவியாகிக் கொண்டே யிருக்கும். 

பானையின் வெப்பமும், பானையின் உள்ளேயிருக்கும் நீரில் உள்ள வெப்பமும் தொடர்ந்து ஆவியாதல் மூலம் வெளியேற்றப் படுவதால் உள்ளே இருக்கும் நீர் குளிர்ந்த நிலையிலேயே இருக்கும். 

எனவே, ஃப்ரிட்ஜில் இருக்கும் நீர் பனிக்கட்டியாவது போன்று, பானையில் இருக்கும் நீர் எந்த நிலைக்கும் மாறாது.

அதேபோல, மண்பானையில் சமைத்த உணவை அடிக்கடி சூடுபடுத்தத் தேவையில்லை. மற்ற பாத்திரங்களை விட சீரான வெப்பநிலையை அதிக நேரம் பராமரிக்கும். 

அதனால், மண்பானையில் சமைக்கும் உணவு நீண்ட நேரம் கெடாமல் இருக்கும். மேலும், மண்பானை நன்மை செய்யும் பாக்டீரியாக்களை அதிகரிக்கும். 

மண்பானையில் சமையல் செய்வதால் ஏற்படும் நன்மைகள் என்ன?

இதனால் தான் அந்தக் காலங்களில் மீன் குழம்பை ஒரு வாரம் வரை கூட வைத்திருந்து சாப்பிடுவதால் எந்தப் பிரச்னையும் ஏற்பட்டதில்லை.

மண்பாண்டங்கள் உணவில் உள்ள அமிலத் தன்மையைச் சமன்படுத்தும் தன்மை கொண்டவை. நல்ல பசியையும் நல்ல தூக்கத்தையும் கொடுக்கும். 

மலச்சிக்கல் வராமல் தடுக்க உதவும். குழந்தை யின்மைப் பிரச்னை ஏற்படாமல் தடுக்கும். மண்பானை உணவு ரத்தக் குழாய்களைச் சீராக்க உதவும். உடல் சூட்டைத் தணிக்கும். 

இப்படி மண்பானையின் மகத்துவத்தை அடுக்கிக் கொண்டே போகலாம். அறு சுவையான உணவும் ஆரோக்கியமான உணவும் கிடைக்க வேண்டு மென்றால் மண்பானையில் சமைத்துச் சாப்பிடுவதே சிறந்தது.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)