ரோகு மீனில் உள்ள ஊட்டச்சத்துக்கள் என்ன?





ரோகு மீனில் உள்ள ஊட்டச்சத்துக்கள் என்ன?

0

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அசைவ உணவு வகைகளில் மீனை அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். இத்தகைய மீன்களில் நிறைய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. சத்துக்கள் நிறைந்த மீன்களில் ஒன்று தான் ரோகு மீன். 

ரோகு மீனில் உள்ள ஊட்டச்சத்துக்கள் என்ன?
ரோகு மீனில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:

இதில் ஏராளமான புரோடீன் மற்றும் ஒமேகா 3 ரக கொழுப்பு, வைட்டமின் ஏ, வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. மேலும் அத்தியாவசிய சத்துக்களான அயோடின், செலினியம், துத்தநாகம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. 

குறிப்பாக இந்த மீனில் இதில் மெர்குரி அளவு குறைவாக உள்ளதால் கர்ப்பிணி பெண்கள் சாப்பிடலாம். இந்த ரோகு மீன் சாப்பிடுவதை உங்கள் இதயத்திற்கு மிகவும் நல்லது. 

குறிப்பாக இதயம் சம்மந்தமான பிரச்சனைகள் எதுவும் வராமல் தடுக்கலாம். இது ஒரு ஆற்று மீன் என்பதால் கொழுப்பு குறைவாகவும், ஒமேகா 3 அதிகமாகவும் நிறைந்துள்ளது.

இந்த ரோகு மீன் இதயம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை குணப்படுத்துவது மட்டும் இல்லாமல் நமது இரத்தலில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்க உதவி செய்கிறது.

தேனில் ஊற வைத்த பூண்டின் நன்மைகள் !

கடல் உணவில் உள்ள ECA/ DHA மற்றும் ஒமேகா 3 போன்ற சத்துக்கள் உங்கள் உடலில் கெட்ட கொழுப்புகளை வெளியேற்றுகிறது. இந்த ரோகு மீன் வாரத்தில் ஒரு முறை எடுத்து கொள்வதினால் உங்கள் கண் பார்வை சீராக இருக்கும்.

நமது உடலின் தைராய்டு சுரப்பிக்கு அயோடின் சத்து மிகவும் முக்கியமானது. எனவே அயோடின் நிறைந்த இந்த ரோகு மீனை நீங்கள் வாரத்தில் ஒரு முறை எடுத்து கொள்வதினால் நமது உடலில் தைராய்டு சுரப்பி சீராக சுரக்க உதவி செய்யும்.

மேலும் இவற்றில் உள்ள செலினியம் நமது உடலில் புற்று நோய் செல்கள் உருவாகாமல் தடுத்து பாதுகாக்கிறது.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)