பன்னீர் திராட்சை சாப்பிடுவதால் உண்டாகும் மருத்துவ குணங்கள் என்ன?

பன்னீர் திராட்சை சாப்பிடுவதால் உண்டாகும் மருத்துவ குணங்கள் என்ன?

0

திராட்சை பழங்களில் பல வகைகள் உண்டு கருப்புத் திராட்சை, பச்சை திராட்சை, பன்னீர் திராட்சை. திராட்சையில் பல வகைகள் இருப்பினும் சத்து ஒன்று தான். இதில் உயிர் சத்துகள் பி-1, பி-2, பி-6, பி-12 ஏராளமாக உள்ளது. 

பன்னீர் திராட்சை சாப்பிடுவதால் உண்டாகும் மருத்துவ குணங்கள் என்ன?
இரும்புச்சத்து, செம்புச் சாத்து மற்றும் பாஸ்பரஸ் சத்து உள்ளது. உலர்ந்த திராட்சையை சித்த மருத்துவத்திலும், ஆயுர்வேத மருத்துவத்திலும் அதிகமாக பயன்படுத்துகின்றனர்.

பச்சை திராட்சை ரசத்தை தினமும் காலை மதியம் மாலை என மூன்று நேரம் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா குணமாகும். திராட்சையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம், அனிமியா குணமாகும்.

நரம்புத் தளர்ச்சிக்கு மிகச்சிறந்த இயற்கை உணவு. வயிற்றில் உள்ள குடல் புண்களை ஆற்றும் சக்தி திராட்சைக்கு உண்டு. மூட்டுவலி, இடுப்பு வலிகளுக்கும் திராட்சை நல்லது.

காமாலை நோய் உள்ளவர்களுக்கு திராட்சை சாறு மருந்தாக பயன்படுகிறது. சாறு திராட்சைப் பழத்தை பன்னீரில் ஊறவைத்து சாறு பிழிந்து பருகினால் இதயநோய் அகலும்.

சிக்கன் ஸ்டஃப்டு பரோட்டா செய்வது எப்படி?

குடற்புண் உள்ளவர்கள், கல்லீரல், மண்ணீரல் கோளாறு உள்ளவர்கள் இந்த சாற்றை மூன்று வேளை, அரை அவுன்ஸ் வீதம் பருகினால் குணம் பெறலாம்.

அசைவ உணவில் கிடைக்கக் கூடிய அனைத்து சத்துகளையும் திராட்சை கொண்டுள்ளதால் சைவ உணவு உண்பவர்கள் இதை சாப்பிடலாம். உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை இது பலப்படுத்தும்.

திராட்சை ஜீரண சக்தியை அதிகரிப்பதுடன், உடலை குளிர்ச்சியாகவும் வைக்க உதவுகிறது. காலை எழுந்தவுடன் ஒரு கோப்பை திராட்சை சாறு அருந்தினால் நாள்பட்ட தலைவலி, ஒற்றைத் தலைவலி நீங்கும்.

குழந்தைகளுக்கு பல் முளைக்கும்போது ஏற்படும் மலச்சிக்கல், பேதி, காய்ச்சல் போன்றவற்றிற்கு இரண்டு வேலை, இரண்டு தேக்கரண்டி சாறு கொடுக்க பலன் தெரியும்.

திராட்சையில் குளுக்கோஸ் சத்து இருப்பதால் உடலுக்கு உஷ்ணத்தையும், சக்தியையும் கொடுக்கிறது. செலுலோஸ், சர்க்கரை, ஆர்கானிக் அமிலம் இருப்பதால் சிறந்த மலமிளக்கியாக பயன்படுகிறது.

பன்னீர் திராட்சை சாப்பிடுவதால் உண்டாகும் மருத்துவ குணங்கள் என்ன?

வயிற்றையும், குடலையும் சுருங்கச் செய்து மலச்சிக்கலை நீக்குகிறது. அதிகப் படியான நீரும், உப்பும், பொட்டாசியமும் கலந்திருப்பதால் ஜீரண சக்தியை எளிதாக்குகிறது.

வயிறு மந்தமாக இருப்பவர்கள் பன்னீர் திராட்சையில் அரை டம்ளர் சாறு எடுத்து சர்க்கரை சேர்த்து குடித்தால் நன்றாக பசி எடுக்கும். பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய்க் கோளாறுகளுக்கு இந்த சாறு நல்ல பலனளிக்கும்.

சுவையான முள்ளங்கி பரோட்டா செய்வது எப்படி?

திராட்சை பழத்தை தொடர்ந்து சாப்பிட்டால் காமாலை நோய், சோகை நோய், தொண்டையில் ஏற்படும் நோய்கள் குணமாகும்.

இது ரத்தத்தை சுத்தப்படுத்தி, நரம்புகளை வலுப்படுத்துவதாலும், மூளைக்கும் இதயத்திற்கும் வலிமையை ஏற்படுத்துவதாலும் இதை அனைவரும் சாப்பிடலாம்.

கீழ்வாதம், தசைவாதம், முடக்கு வாதம், சுவாச நோய், சதை பெருக்கம் போன்ற நோய்களுக்கு இது சிறந்த மருந்தாகும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)