குச்சி ஐஸ் உருவானது எப்படி? 11 வயசு பையன் செஞ்ச சம்பவம் !





குச்சி ஐஸ் உருவானது எப்படி? 11 வயசு பையன் செஞ்ச சம்பவம் !

0

குச்சிஐஸ் என்றால் யாருக்குத் தான் பிடிக்காது. சின்ன வயசு குழந்தை முதல் வயதான தாத்தா, பாட்டி வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒன்றாக இருப்பது குச்சிஐஸ். 90ஸ் கிட்ஸ்களின் மிகவும் விருப்பமான தேர்வும் குச்சிஐஸ் தான். 

குச்சி ஐஸ் உருவானது எப்படி? 11 வயசு பையன் செஞ்ச சம்பவம் !
அந்தக் காலத்தில் இந்த குச்சிஐஸ் விக்கிறவர் தெருவில் வந்து விட்டால் போதும். வீட்டில் அப்பா அம்மா கிட்ட கெஞ்சி காசு வாங்கிக் கொண்டு ஓடிப்போய் குச்சிஐஸ் வாங்கிக் கொண்டு வந்து சாவகாசமாக சப்பி சப்பி சாப்பிடுவாங்க நம்ம 90ஸ்கிட்ஸ்.

அவுங்க மட்டுமா? இந்தக் காலத்து குழந்தைகள் கூட குச்சி ஐஸ்என்றால் உடனே வாயைதிறந்து கொண்டு ஓடிப்போய் வாங்கி சாப்பிடுறாங்க. 

குச்சிஐஸ் நம் ஊரில் மட்டுமல்ல உலகம் முழுவதுமே மிகப்பிரபலம். தோராயமாக ஒவ்வொரு வருடமும் சுமார் 2 பில்லியன்களுக்கும் அதிகமான குச்சிஐஸ்கள் உலகம் முழுவதும் விற்பனை செய்யப் படுகிறது.

இவ்வளவு பிரபலமான ஒன்றை யார் கண்டுபிடித்திருப்பாங்க என எப்போதாவது நீங்கள் யோசித்த துண்டா? 

குச்சிஐஸ் உருவான கதை குறித்து உங்களில் பலருக்கும் தெரிந்திருக்காது என்பதால் தான் அதைப் பற்றி இன்று கூறலாம் என முடிவு செய்தேன். 

குச்சிஐஸ் உருவானது ஒரு எதிர்பாராத சம்பவத்தின் விளைவால் தான். இதை உருவாக்கியது பெரிய விஞ்ஞானி யெல்லாம் கிடையாது. ஒரு 11 வயசு பையன் தான் இந்த குச்சி ஐஸை கண்டுபிடித்தார்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த பிராங்க் எப்பர்சன் தான் இந்த சூப்பரான கண்டுபிடிப்புக்கு சொந்தக்காரர். இவர் தன்னுடைய 11 வயதில் இந்த அதிசயத்தை நிகழ்த்தினார். 

1905ம்ஆண்டு ஒரு நாள் இரவு கப் ஒன்றில் நீர் மற்றும் சோடா கலந்த கலவையை மறதியில் அப்படியே வைத்து விட்டு தூங்கி விட்டார் போலிருக்கிறது.   

அடுத்த நாள் காலை எழுந்து  பார்க்கும் போது கப்பில் இருந்த சோடா கலந்த நீர் அப்படியே உறைந்து போயிருந்தது. சோடா மற்றும் தண்ணீர் இரண்டையும் ஒரு சிறிய குச்சியை வைத்து கலக்கி விட்டு அந்த குச்சியையும் அதிலிருந்து எடுக்காமலே இருந்து விட்டார். 

அடுத்த நாள் காலை ஒரு அற்புதமான குளிர்ந்த கட்டி அந்த குச்சிக்கு நடுவில் இருந்தது. இது தான் முதன் முதலாக உருவாக்கப்பட்ட குச்சிஐஸ் ஆகும். 

ஒரு ஷாக் மரணம்.. சொல்லும் பாடம் !

1924ம் ஆண்டு இந்த குச்சி ஐஸ் தயாரிப்புக்கு காப்புரிமை வாங்கி அதை வியாபாரம் செய்ய தொடங்கினார் பிராங்க் எப்பர்சன். 

அதன் பிறகு இந்த தயாரிப்பு உலகம் முழுவதும் பிரபலம் அடைந்தது. குச்சிஐஸில் ஏகப்பட்ட பிளேவர் இருந்தாலும் உலகத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் விரும்புவது என்னவோ செர்ரி பிளேவர் தான். 

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)