சுவையான உருளைக்கிழங்கு மசாலா சாண்ட்விச் செய்வது எப்படி?

சுவையான உருளைக்கிழங்கு மசாலா சாண்ட்விச் செய்வது எப்படி?

2
உருளையில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் இருதய நோயாளிகளுக்கும், ரத்த கொதிப்பு காரர்களுக்கும் இது மிகவும் நல்லது. உருளையை சர்க்கரை நோயாளிகள் தவிர்ப்பது நல்லது. 
சுவையான உருளைக்கிழங்கு மசாலா சாண்ட்விச் செய்வது எப்படி?

உருளைக் கிழங்கில் உள்ள மாவுச்சத்து, அடிவயிறு மற்றும் இரைப்பைகளில் உள்ள குழாய்கள் வீங்குவதையும் அவற்றில் நச்சுநீர் தேங்குவதையும் முன் கூட்டியே தடுத்து உடலுக்கு நன்மை செய்கிறது. 

உருளைக்கிழங்கில் கார்போஹைட்ரேட் அதிகமாகவும் மற்றும் சிறிதளவு புரதமும் நிறைந்துள்ளது. ஆகவே ஒல்லியாக இருப்பவர்களின் எடையை அதிகரிப்பதற்கு, உருளைக்கிழங்கு உறுதுணையாக இருக்கும். 

பச்சை உருளைக்கிழங்கை அரைத்து எடுத்த பேஸ்ட்டை தேனுடன் கலந்து சருமத்தில் தடவினால் சருமம் மிளிரும். மேலும் இது பரு மற்றும் சரும புள்ளிகளை குணப்படுத்த உதவும்.

சரி இனி உருளைக்கிழங்கை பயன்படுத்தி சுவையான உருளைக்கிழங்கு மசாலா சாண்ட்விச் செய்வது எப்படி? என்று இன்றைய சமையல் பதிவில் காணலாம்.

தேவையானவை : . 

பிரட் - 2 துண்டுகள்
 
வெண்ணை - 1 டேபிள் ஸ்பூன்
 
உருளைக்கிழங்கு- 1 (பெரியது)
 
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
 
இஞ்சி - சிறிதளவு
 
மிளகாய்த்தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
 
கரம் மசாலா - சிறிதளவு
 
கொத்தமல்லி - சிறிதளவு
 
பச்சை மிளகாய் - 1
 
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
 
உப்பு - தேவையான அளவு

குழந்தைகளை தனி அறையில் தூங்க வைப்பது? 

செய்முறை : .
சுவையான உருளைக்கிழங்கு மசாலா சாண்ட்விச் செய்வது எப்படி?

உருளைக்கிழங்கை நன்றாக வேக வைத்து தோலை உரித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். 

பிறகு உருளைக்கிழங்கை மசித்து அதனுடன் இஞ்சி, பச்சை மிளகாய், கரம் மசாலா, மிளகாய்த்தூள், எலுமிச்சை சாறு, கொத்தமல்லி, நெய் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். 

பிரெட் துண்டின் மேல் வெண்ணையை நன்றாக தடவி அதனுள் மசாலா கலவையை வைத்து மற்றொரு பிரட் துண்டை சேர்த்து மைக்ரோ அவன் 

அல்லது தவாவில் சமைத்து எடுத்தால் வித்தியாசமான, ருசியான உருளைக்கிழங்கு மசாலா சாண்ட்விச் ரெடி.
Tags:

Post a Comment

2Comments

  1. சாண்ட்விச் சூப்பரான டிஷ் அதிலும் உருளைக்கிழங்கு மசாலா சாண்ட்விச் அருமையா இருக்கும்

    ReplyDelete
  2. இதெல்லாம் எப்போதும் செய்றது தா‌ன்...

    ReplyDelete
Post a Comment