Recent

featured/random

பால் பொருட்களில் உள்ள அபாயம் தெரியுமா?

0

பால் பொருட்கள் கூட எளிதாக நச்சுத்தன்மை பெறலாம். அழுக்கு அல்லது மலக்கழிவு கலந்திருப்பது, பதப்படுத்தும் இயந்திரத்தின் பாதிப்பு, 

பால் பொருட்களில் உள்ள அபாயம் தெரியுமா?
பசுவின் மடியில் ஏற்படும் தொற்று, பசுவின் நோய்கள், மாடுகளின் தோலில் வசிக்கும் கிருமிகள், பூச்சிகள் ஆகியவற்றால் பாதிப்பு உண்டாகலாம். 

பசு, எறுமை மாடுகள் பூச்சிக் கொல்லி, ராசாயன நச்சு கொண்ட தீவனங்களை உட்கொள்வதால் பால் பொருட்களில் சால்மோனெல்லா போன்ற பாக்டீரியாக்கள் இருக்கலாம். 

அதனால் பால் பொருட்களை பதப்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும் என்கிறார் தில்லி ஃபோர்டிஸ் மருத்துவ மனையைச் சேர்ந்த டாக்டர் சிம்ரன் சைனி. இந்தியாவில் மாடுகள் குப்பைகளை மேய்கின்றன. 

இதனால் நச்சுக்களை உட்கொள்கின்றன. இது பாலின் தரத்தை பாதிக்கிறது. பால் பண்ணை உரிமையாளர்கள் தங்கள் பங்கிற்கு நச்சை சேர்க்கலாம். பாலில் நீர், யூரியா, காஸ்டிக் சோடா கலக்கப் படலாம். 

பால் பொருட்களில் பயன்படுத்தப்படும் செயற்கை வண்ணங்களில் நச்சுக்கள் கலந்திருக்கலாம். காட்டேஜ் சீஸ் தயாரிக்க நச்சுத் தன்மை கொண்ட ஆர்கிமோனே எண்ணெய் பயன்படுத்தப் படலாம். 

இதன் நீண்டகால பயன்பாடு சிறுநீரக, கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார் குர்காவ் டபிள்யூ பிரதிக்‌ஷா மருத்துவ மனையின் ஊட்டச்சத்து வல்லுனரான தீப்தி திவாரி.

பாலின் தன்மையைப் பாதுகாப்பதற்காக கார்பனே சேர்க்கப் படுவதும் பாதிப்பை உண்டக்கலாம். அதனால் இயற்கை உணவுகளிலும் உஷாரய்யா உஷாரு.

தாய்ப்பால் உணர்ச்சிகரமான ஓர் உண்மைக் கதை !

பால் பொருட்களை பயன்படுத்தும் வழிகள்

பால் பொருட்களில் உள்ள அபாயம் தெரியுமா?

குளிர்பதனம்: 

பால் பொருட்கள் குளிர்வூட்டப்பட்ட நிலையில் இருக்க வேண்டும். ஈரமான இடத்தில் இருந்தால் பால் எளிதாக கெட்டுப் போகலாம். 

கிருமிகள் காரணமாக வெப்ப நிலையில் சீஸ், யோகர்ட் அதிகமாக புளிக்கும் என்கிறர் டாக்டர் சைனி.

கிருமி நீக்கம்: 

பாலை காய்ச்சுவது அதன் சுவை மற்றும் தன்மையில் எந்த மாற்றமும் ஏற்படாமல் கிருமிகளை கொல்வதற்கான சிறந்த வழி  என்கிறார் டாக்டர் ஜதனா.

வாங்குங்கள்: 

பேக் செய்யப்பட்ட கிருமி நீக்கப்பட்ட சீஸ், யோகர்ட், பால் வாங்குவது நல்லது. சுவை சரியில்லை என்றால், பயன்படுத்த வேண்டாம்.

பாதுகாப்பு:

பாலை வெளிச்சம் படாத இடத்தில் வைக்கவும்.

ஃப்ரீசர்: 

பாலை ஆறு வாரங்களுக்கு ஃப்ரீசரில் வைத்திருக்கலாம். ஆனால், உருகிய பின் அது தனது மென்மையான தன்மையை இழக்கு. ஸ்கிம்ட் பால் பிரிசரில் வைக்க ஏற்றது.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(300)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !