சமையல் எண்ணெய்யை திரும்ப பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்?





சமையல் எண்ணெய்யை திரும்ப பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்?

0
நம் உடலில் கொழுப்பு செரிமானத்திற்கு உதவுவது பைல் ஆசிட்ஸ் (Bile acids) என்று சொல்லக்கூடிய கொழுப்பு அமிலங்கள் ஆகும். கொழுப்பு அமிலங்கள் உடலில் துணை விளைபொருளாக கிடைக்க கூடியவை. 
சமையல் எண்ணெய்யை திரும்ப பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்?

அதன் காரணமாக மிகக் குறைந்த அளவே உடலில் கிடைக்கும். மேலும் விவரங்களுக்கு இந்த பதிவினை பாருங்கள் புரியும். நீங்கள் ஒரு முறை உபயோகிக்கும் போது அதன் அமைப்பில் பெரிய மாற்றம் இருக்காது.  

டெல்டா மாவட்டம் என்றால் என்ன? #Delta District

ஆனால் மீண்டும் மீண்டும் சூடு செய்யும் போது அதன் வெப்பநிலை காரணமாக Oxidation, Hydrolysis, Polymerization போன்ற வினைகள் நடக்கும். 
 
இதன் காரணமாக அதன் உருவத்தில் மாற்றம் ஏற்படும், உருவத்தில் மாற்றம் என்றால் பண்பிலும் மாற்றம் ஏற்படும்.
 
இதன் காரணமாக அதிக முறை உபயோகித்த எண்ணெயின் விஸ்காசிடி, டென்சிடி மாறுவதனை கண்ணால் பார்க்க இயலும். 
 
மீண்டும் மீண்டும் எண்ணெயை பயன்படுத்தும் போது நீண்ட கார்பன் - ஹைட்ரஜன் உள்ள சிங்கிள் பாண்ட் எண்ணெயில் இடையே நிறைய டபுள் பாண்ட் உள்ள எண்ணெயாக மாறும். 
 
இதனுடன் பெரக்ஸைடு மற்றும் ஆல்டிஹைடாக மாற வாய்ப்புள்ளது. இந்த நச்சுத் தன்மை உடைய எண்ணெய் செரிமானம் ஆகாது, உடலில் முதலில் தொப்பையாக தங்கும். 
சமையல் எண்ணெய்யை திரும்ப பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்?

எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் புட் பாய்சன் என்று ஆரம்பிக்கும் உடல் உபாதைகள் முதல் கேன்சர் வரை அனைத்து நோயினையும் ஏற்படுத்தும். 

ஆண்கள் வயதுக்கு வரும் அறிகுறி என்ன? எப்படி தெரிந்து கொள்வது?

சொந்த காசில் சூனியம் வைத்து கொள்வது என்பது போல் ஒரு முறை உபயோகிக்க எண்ணெயை மறுமுறை உபயோகிப்பது உடலுக்கு தீங்கினை விளைவிக்க கூடியவை. 

குறிப்பாக கடைகளில் போடப்படும் போண்டா, பஜ்ஜி வகைகளை தவிர்ப்பது நல்லது.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)